நண்பர்களே வணக்கம் 🙏
நேற்றைய உச்ச நீதிமன்ற TET தீர்ப்பு (110 பக்கங்கள்) கிட்டத்தட்ட அனைத்து குழுக்களிலும் பகிரப்பட்டுள்ளது...🙏
வழக்கறிஞர்கள்
இயக்க பொறுப்பாளர்கள்
நண்பர்கள் அது சார்ந்த தகவலை பல குழுக்களில் பகிர்ந்துள்ளனர் 👍
எனது பார்வையில் 🙏
நேரடியாக பக்கம் 104
206... RTE 23 இன் படி TET என்பதை *ஓர் அடிப்படை தகுதி ( minimum qualification )* ஆக உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது...
VII... சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்ந்து
207 to 213 ...
சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்ந்த TET முடிவிற்காக தலைமை நிதிபதிக்கு பரிந்துரை...
Viii
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு
214... RTE 2(n) வரம்புக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளியில் ( சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தவிர) தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் TET தகுதி பெற்று இருக்க வேண்டும்...
புரிதலுக்கு...
2 (n) என்பது...
1 to 8 வகுப்பு வரை... அதாவது
14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கல்வி நிறுவனம்..
தமிழகத்தில்....
1-5 primary
6-8 upper primary teachers..
Irrespective of their length of service....
எப்போது நியமனம் பெற்று இருந்தாலும்... TET வருவதற்கு முன் பணியில் சேர்ந்து இருந்தாலும்..
தற்போது பணியில் இருந்தால் TET தகுதி வேண்டும்...
206 & 214 இந்த இரண்டு மட்டுமே நேற்றைய இறுதி தீர்ப்பு 🙏
215- கள நிலவரங்கள் நடைமுறை சிக்கல்கள் புரிகிறது ...
இருபது அல்லது முப்பது ஆண்டுகள் கூட பணிக் காலம் பெற்ற non TET ஆசிரியர்கள் கூட இருக்கலாம்... அவர்கள் எந்த வித புகாருக்கும் இடமளிக்காமல் சிறந்த கல்வியை தற்போது வரை வழங்கி வரலாம்...
அப்படிப்பட்டவர்களுக்கு TET தேவை என்பது கொடுமையான (bit harsh) செயலாக தோன்றலாம்...
இருப்பினும் சட்டப் படி சட்டத்தை நிலை நாட்டுவது "தீமையான" செயல் ஆகாது..
Operation of a statue can never be seen as an evil
( TET தேவை என்ற தங்களின் தீர்ப்பிற்கு நியாயம் கற்பிக்கும் வரிகள் 215)
Constitution of India
Article 142 படி (உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரம்)
சில தளர்வுகள்/ சலுகைகள்
216 . இன்றைய தேதியில் 5 ஆண்டுகளுக்கு உள் பணிக்காலம் உள்ளவர்கள் (TET தகுதி இல்லாமல்) பணியில் தொடர அனுமதி ( ஆனால் இவர்களுக்கு பதவி உயர்வு பெற வேண்டும் எனில் TET கட்டாயம்) ...
புரிதலுக்கு தற்போது பணியில் உள்ள 1/9/1970 க்கு முன் பிறந்தவர்களுக்கு பணியில் தொடர TET வேண்டாம்...
217... TET வருவதற்கு முன்பே பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்..
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிக் காலம் இருப்பின் ( 1/9/1970 க்கு பிறகு பிறந்தவர்கள்) ... அவர்கள் இன்றைய தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் ( 31/8/2027) TET தகுதி கட்டாயம் பெற வேண்டும் ...
இரண்டு ஆண்டுகளுக்கு உள் தகுதி பெற வில்லை என்றால் பணியில் தொடர இயலாது....
218... மொத்தத்தில்
புதிய நியமனங்கள் மற்றும் பதவி உயர்விற்கு TET qualification கட்டாயம்...
(சிலர் இதை தவறாக புரிந்து கொண்டு பதவி உயர்விற்கு மட்டும் தான் TET என்கிறார்கள்...
அப்படி அல்ல 216 & 217 பிறகு இதை படித்தால் புரியும்...
கூடுதல் சந்தேகங்கள் 😊
1) 29/7/2011 க்கு முன் பின் என்ற வேறுபாடு உள்ளதா? சலுகைகள் உள்ளதா?
தற்போது பணியில் உள்ள (1-8 வகுப்பு ஆசிரியர்கள்) ஆசிரியர்கள்
Less than 5yrs
More than 5yrs என்ற சலுகைகள் மட்டுமே உள்ளது ( அதுவும் பணியில் தொடர மட்டும்)
பதவி உயர்வு எனில் எந்த ஒரு தளர்வும் /விலக்கும் இல்லை .
2) மாநில அரசுகள் இதை எதிர்த்து கொள்கை முடிவு எடுக்க இயலுமா?
இந்த தீர்ப்பு constitution of Indian சிறப்பு அதிகாரப்படி வழங்கப்பட்டது
இது சட்டப்பூர்வமானது..
தமிழக அரசு தனியே விலக்கு அளிக்க இயலாது
ஆனால் அரசு நினைத்தால்
சிறப்பு TET நடத்தலாம்..
TET மதிப்பெண் சலுகைகள் வழங்கலாம்..
இரண்டு ஆண்டுகளில் 4 TET ( விதிப்படி ஆண்டிற்கு இரண்டு TET நடத்த வேண்டும்) நடத்தலாம்...
3) தீர்ப்பில் TET paper 1 paper 2 பற்றி எதுவும் இல்லையே?
TET என்பது (1-8) பொதுவானது..
ஆசிரியர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப
TET 1 ( 1-5)
TET 2 (6-8) என நடத்தப்படுகிறது...
4) BT to PG TET வேண்டுமா?
BT (6-8) RTE க்குள் வருகிறது
PG (11-12) RTE வரம்பில் இல்லை...
இதில் இரு வேறு கருத்துகள் உள்ளன..
இருப்பினும் முந்தைய சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு படி...
தற்போது நிலை தொடர
தற்போதைய நிலையில் இருந்து பதவி உயர்வு பெற TET தேவை...
எனவே PG TET வரையறையில் இல்லை எனவே PG நேரடி நியமனம் எனில் TET வேண்டாம் என்பது நாம் அறிந்ததே..
ஆனால் BT பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற TET வேண்டும்...
எனவே logically BT to PG
BT to High school HM promotion TET வேண்டும் என்பது எனது கருத்து...
5) இந்த தீர்ப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவன தீர்ப்பு என்கிறார்களே?
TET இந்தியா முழுமைக்கும் பொதுவானது...
நேற்றைய தீர்ப்பு தமிழகம் உள்ளிட்ட 20 வழக்குகள் ஒன்றிணைந்து தீர்ப்பு இது ...
பதவி உயர்விற்கு TET வேண்டாம்..
TET வேண்டும் என எல்லா வழக்குகள் ஒன்றாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது 🙏
பக்கம் பக்கமாக சொல்லி உள்ளீர்கள் கடைசியில் என்ன தான் சொல்ல வருகிறீர்கள் 🤣🤣🤣..
1) 1/9/1970 க்கு முன் பிறந்த தற்போதைய SGT/BT ஆசிரியர்களுக்கு TET வேண்டாம்...
2) 1/9/1970 க்கு பின் பிறந்த SGT /BT அனைவரும் 31/8/2027 க்குள் TET தகுதி கட்டாயம் பெற வேண்டும்..
3) பதவி உயர்வு வேண்டும் எனில் அனைத்து SGT/BT கட்டாயம் TET qualification பெற வேண்டும் 🙏
நன்றி 👍
TNTET apply செய்ய கடைசி நாள் 8/9/25 ..
முன் அனுமதிக்கு CEO/ DEO (Ele) தலைமை ஆசிரியர் வழியாக விண்ணப்பிக்கவும்..
( 12 ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்) CEO/DEO (Ele) அனுமதி கடிதம் பதிவேற்றம் செய்ய தேவையில்லை... அதற்காக காத்திருக்க வேண்டாம்
நிர்வாக திறனற்ற கோனவாயன்
ReplyDelete