TET தேர்வு வழக்கில் தீர்ப்புக்கு எதிராக ஆசிரியர் கூட்டமைப்பு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2025

TET தேர்வு வழக்கில் தீர்ப்புக்கு எதிராக ஆசிரியர் கூட்டமைப்பு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு

 

டெட்​ தேர்வு வழக்கு தீர்ப்​பில் இந்த மாத இறு​திக்​குள் உச்​ச நீதிமன்​றத்​தில் சீராய்வு மனு தாக்​கல் செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருப்​ப​தாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தெரி​வித்​துள்​ளது.


இதுதொடர்​பாக இந்​திய பள்ளி ஆசிரியர் கூட்​டமைப்​பின் அகில இந்​திய தலை​வர் சி.கே.​பார​தி, பொதுச்​செய​லா​ளர் சாவா ரவி, துணைத் தலை​வர் அ.ம​யில், செய​லா​ளர் அ.மாய​வன், செயற்​குழு உறுப்​பினர் செ.​நா.ஜ​னார்த்​தனன் ஆகியோர் கூட்​டாக நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஆசிரியர் தகு​தித்​தேர்​வில் உச்​சநீ​தி​மன்​றம் வழங்​கி​யுள்ள தீர்ப்பு குறித்​தும், கட்​டாய கல்வி உரிமைச் சட்​டத்​தின் பிரிவு 23-ஐ திருத்​து​வது குறித்​தும் மறுஆய்வு மனு தாக்​கல் செய்ய பிரதமர் மற்​றும் மத்​திய கல்வி அமைச்​சரிடம் கோரிக்கை மனு சமர்ப்​பி்க்​கப்​பட்​டுள்​ளது. மேலும், உச்​சநீ​தி​மன்​றத்​தில் கூட்​டமைப்பு சார்​பில் சீராய்வு மனு தாக்​கல் செய்​ய​வும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.


டெட் வழக்​கில் உச்​ச நீ​தி​மன்​றம் வழங்​கிய தீர்ப்​பி​னால் நாடு முழு​வதும் 25 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள் பாதிக்​கப்​படும் சூழல் உள்​ளது. கட்​டாயக் கல்வி உரிமை சட்​டம் அமல்​படுத்​தப்​படு​வதற்கு முன்பு நியமிக்​கப்​பட்ட ஆசிரியர்​களுக்கு தகு​தித்​தேர்வு கட்​டா​யம் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்​சில் (என்​சிடிஇ) குறிப்​பிட​வில்லை என்​பது சீராய்வு மனு​வில் சுட்​டிக்​காட்​டப்​படும்.இவ்​வாறு அவர்​கள் கூறி​யுள்​ளனர்.

2 comments:

  1. எத்தனை காலம் தான் ஏமாற்றுவர் இந்த நாட்டிலே,... தமிழ் நாட்டிலே...

    ReplyDelete
  2. சிறப்பு தேர்வு வைத்தால் உத்தமம்... சீராய்வு செல்வது ஆசிரியர்களை ஏமாற்றும் செயல்.. 2026 தக்க பாடம் புகட்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி