ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO)
(தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை கவுன்சில்)
ஊடகச்செய்தி : 08.10.2025
தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் போராட்டக்களத்தில் ஜாக்டோ-ஜியோ
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கடந்த (08.10.2025) மாநில தோழர்.மு.சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர்கள் தோழர்.,சோ.சுரேஷ் தோழர்.மன்றம்.நா.சண்முகநாதன், ஆகியோர் கொண்ட கூட்டு தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ சார்பாக அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்கள் கோரிக்கைகள் மற்றும் அரசின் அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர் ஆசிரியர் கோரிக்கைகளுக்காக போராட்டக்களத்தில் ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் சமரசமற்ற போராட்டத்தை நடத்தி அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளாகளுக்கு ஊதிய மாற்றம் பெறப்பட்டது. மேலும் அன்றைய ஆட்சிக்காலத்தில் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடிக்கொண்டிருந்த நிலையில் இன்றை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் எங்களது போராட்டக்களத்திற்கு வந்து கழக ஆட்சி ஆட்சிக்கு வந்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அறித்தார். ஆதோடு மட்டுமின்றி 2021 தேர்தலின் போது அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிப்பட்டியலில் வரிசை எண் 309 முதல் 318 வரை எங்களது கோரிக்கைகளான பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை அச்சிட்டு அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்கள் மத்தியில் நம்பிக்கை விதையை விதைத்தார். எனவே நமக்கான விடியல் ஆட்சி வரும் என்ற கனவோடு அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்கள் தங்களது குடும்பத்தோடு இணைந்து முழு ஆதரவை தெரிவித்தனர்.
நாங்கள் எதிர்பார்த்தபடியே ஆட்சிக்கு வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் 2022ஆம்ஆண்டு ஜாக்டோ-ஜியோ வின் வாழ்வாதார கோரிக்கை மாநாட்டில் பங்கேற்று சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்கள் மத்தியில் நான் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறக்கவில்லை, மறைக்கவில்லை, மறுக்கவில்லை எனவும், நிதி நிலை சீரானவுடன் கண்டிப்பாக உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அறிவித்தார்.
ஜாக்டோ-ஜியோவின் தொடர் முறையீடு மற்றும் கோரிக்கை இயக்க நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 28.04.25 அன்று சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு ஊழியர், ஆசிரியர்,அரசுப்பணியாளர்களின் நீண்ட நாளைய கோரிக்கையான சரண் விடுப்பு தொகையை வழங்கிடவும், ஓய்வூதியம் சம்பந்தமாக உயர்திரு.ககன்தீப்சிங் பேடி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மூன்று நபர்குழு போடப்பட்டு அக்குழு அறிக்கையின் முடிவை 30.09.2025க்குள் பெற்று ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கு முன்னால் பல்வேறு ஆட்சியாளர்களால் பல்வேறு கமிட்டிகள் போடப்பட்டிருந்தாலும் இக்கமிட்டியின் மீது அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர் ஆகியோர் மிகுந்த நம்பிக்கை கொண்டனர். அக்கமிட்டியின் தலைவர் அவர்களும் அனைத்து சங்கங்களையும் அழைத்து கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தினார். கடந்த 22.08.2025 அன்று கருத்துகேட்பு கூட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ அழைக்கப்பட்டு பழைய ஓய்வூதியம் கோரிக்கை சார்பான அனைத்து ஆவணங்களையும் புள்ளிவிபரங்களோடு சமர்பித்து, பழைய ஓய்வூதியம் வழங்குவதால் அரசுக்கு கூடுதல் வருவாய் ஏற்படுமே தவிர இழப்பு கிடையாது. புதிய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்தினால் மட்டுமே அரசுக்கு கூடுதல் இழப்பு ஏற்படுகிறது. என்பதை சுட்டிக்காட்டி பேசப்பட்டது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியம் வழங்குவோம் என்று வாக்களித்தார். தவிர புதியஓய்வூதியத்திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம், பழைய ஓய்வூதியத்திட்டம் என ஆய்வு செய்து அதன்முடிவாக ஓய்வூதியம் வழங்கப்படும் எனகூறவில்லை. எனவே, இக்கமிட்டியின் மீது எங்களுக்கு அதிருப்தி உள்ளது. ஆனாலும் இக்கமிட்டி தனது முடிவை கால நீட்டிப்பு செய்திடாமல் உரிய காலத்தில் 30.09.2025க்குள் அரசுக்கு வழங்கிட வேண்டும். என வலியுறுத்தினோம்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே, எங்களது கோரிக்கைகள் குறித்து ஆதரவோடு வாக்கு கொடுத்த தமிழ்நாடு முதல்வர் அவர்கள், நான்கரை ஆண்டுகள் காலதாமதப்படுத்தி தற்போது இக்கமிட்டியின் முடிவாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்திடுவார் என அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளாகள் மிகுந்த எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது மற்ற கமிட்டிகளைப்போலவே இக்கமிட்டியும் கால நீட்டிப்பு செய்திருப்பது மிகந்த அதிருப்தியையும் ஏமற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்களின் சார்பாக ஜாக்டோ-ஜியோ முன்வைத்த கோரிக்கைகளில் சரண் விடுப்பு ஒப்படைப்பு தவிர வேறு எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.
கோரிக்கைகள்:
01.04.2003 க்குப்பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிடும் வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
>
ஏ
தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்.243, நாள்:21.02.2023 மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையில் அரசாணை எண்.76, நாள்: 30.09.2024 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக்களைய வேண்டும். கல்லூரிப் பேராசியரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு (CAS), பேராசிரியர் பணி மேம்பாடு, ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப்பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அரசு தொழிற்பயிற்சி நிலைய PPP & COE ஊழியர்கள், பல்நோக்கு மருத்துவமணைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30% மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்காக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5% மாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25% மாக வழங்கிட வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
2002 முதல் 2007 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்திட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பாக சார்பாக இலட்சக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர் பங்கேற்கும் போராட்ட இயக்க நடவடிக்கைளை மிக எழுச்சிகரமாக நடத்திடுவது என முடிவெடுக்கப்பட்டது.
கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்கால இயக்க நடவடிக்கைகள்:
16.10.2025 அன்று பழைய ஒய்வூதியத் திட்டத்தை உடனே வழங்கிட வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து அனைத்து வட்டாரங்களிலும் ஆர்பாட்டம் நடத்துவது.
18.10.2025 அன்று ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தை நடத்துவது.
27.10.2025 முதல் 31.10.2025 வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்களை சந்தித்து
நமது போராட்டத்தின் அவசியம் குறித்தும், அதில் பங்கேற்பதன் அவசியம் குறித்தும் மாவட்ட அளவில் ஜீப் ஜாதா பிரச்சார இயக்கம் நடத்துவது.
18.11.2025 அன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்திடுவது.
அதன்பிறகு தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால் காலவரையற்ற வேலை நிறுத்தம் உள்ளிட்ட அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைக்கு செல்வதுபற்றி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கப்படும்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
kindky give equal salary to secondary grade teachers .kindly rectify salary difference.
ReplyDelete