1 - 9 மாணவர்களுக்கான FUTURE READY மாதாந்திர பயிற்சி மதிப்பீட்டுப் புலம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2025

1 - 9 மாணவர்களுக்கான FUTURE READY மாதாந்திர பயிற்சி மதிப்பீட்டுப் புலம்

மதிப்பீட்டு புலம் - Future Ready* 


💧அனைத்து அரசு தொடக்க ,நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அடைவுத்தேர்வு மற்றும் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும்  பொருட்டு Future Ready திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


💧அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் *Future Ready* வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்திட வேண்டும்.


💧1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான Future Ready வினாத்தாள்களை ஆசிரியர்கள் CMS வலைத்தளம் வழியாக பதிவிறக்கம் செய்து  பள்ளியில் உள்ள திறன் மிகு வகுப்பறைகள் பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

💧1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை எண்ணும் எழுத்தும் செயல்பாடாக பயிற்சி அளிக்க வேண்டும்.


*1 முதல் 5 வகுப்பு வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்.

https://emis.tnschools.gov.in 

⬇️

Class Teacher Id & Password 

⬇️

Go to CMS PORTAL 

⬇️

My courses

⬇️

Future Ready Question 2025


💧6 முதல் 9 வகுப்புக்கான Future Ready  வினாத்தாள்கள் *https:/ exam.tnschools.gov.in. என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.


💧 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வகுப்பறை செயல்பாடாக மேற்கொள்ள வேண்டும்.


6 முதல் 9 ஆம் வகுப்பு வரை -வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறை

https://exam.tnschools.gov.in

⬇️

HM login

⬇️

Descriptive 

⬇️

Download QP


அனைத்து அரசு தொடக்க,நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பளளிகளில் Future Ready வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளி பார்வையின் போது உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி