குன்றத்தூரில் அரசு பள்ளி வகுப்பறையில் 11-ம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
1. காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் மணிகண்டன் நகர் நடைபாதை தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 16), குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு முடிந்து நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற வெங்கடேசன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தார்.
2. அவரை ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
3. அங்கு வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் பள்ளி விடுமுறை நாட்களில் அதிக அளவில் வெங்கடேசன் செல்போனை பயன்படுத்தி வந்ததாகவும் பள்ளிக்கு செல்லும் நாளில் தலை வலிப்பதாக கூறிவிட்டு சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து இறந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
4. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மாணவர் இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி