அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பின், ஜாக்டோ - ஜியோ வெளியிட்ட அறிக்கை:
நான்கரை ஆண்டுகளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கையில், சரண் விடுப்பு தவிர, வேறு எந்த கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றவில்லை. வரும் 16ம் தேதி, கோரிக்கை அட்டை அணிந்து, அனைத்து வட்டாரங்களில் ஆர்ப்பாட் டம் நடத்தப்படும்.
நவ.,18ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். அதன்பின், கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில், காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வது குறித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Nengalum unga sangamum
ReplyDeleteஅகவிலைப்படி உயர்வு என்ற எலும்பு துண்டு வரும் கவ்விட்டு வால் ஆட்டிட் டு போயிருவானுக
ReplyDeleteஇந்த ஆட்சி அமைந்தால் நிறைய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பியது வீணாகி விட்டது. தொகுப்பு ஊதியம் ஒழிக்கப்பட்டு காலமுறை ஊதியம் என்றார்கள். அனைத்து இடங்களிலும் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் மட்டுமே செய்து குறைந்த ஊதியம் கொடுத்து சாகடித்து வருகிறார்கள். அதிமுக இதேபோல் செய்து ஆட்சி இழந்து விட்டது.
ReplyDelete