மத்திய அரசு பள்ளியில் வேலை: 7,267 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2025

மத்திய அரசு பள்ளியில் வேலை: 7,267 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

 

ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? எனது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.


பணி நிறுவனம்: மத்திய அரசு நடத்தும் ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளி (இ.எம்.ஆர்.எஸ்.)


காலி பணி இடங்கள்: 7,267 (கற்றல் மற்றும் கற்றல் பணி அல்லாதது)


பதவி: முதல்வர்-225, முதுகலை பட்டதாரி ஆசிரியர்-1,460, பட்டதாரி ஆசிரியர்கள், 3,962, ஸ்டாப் நர்ஸ் (பெண்) -550, ஆஸ்டல் வார்டன்-635, அக்கவுண்டெண்ட்-61, ஜூனியர் செகரட்டரியேட்-228, லேப் அசிஸ்டெண்ட்-146.


கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, முதுகலை, இளங்கலை பட்டப்படிப்புடன் எம்.எட், பி.எட்., பி.எஸ்சி நர்சிங், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பட்டப்படிப்பு


வயது: முதல்வர் பதவிக்கு 50 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு 40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டதாரி ஆசிரியர், ஸ்டாப் நர்ஸ், ஆஸ்டல் வார்டன் பணிக்கு 35 வயதுக்குள்ளும், மற்ற பணிகளுக்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.


தேர்வு முறை: டையர்-1, டையர்-2, திறனறி தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு


விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-10-2025


இணையதள முகவரி: https://nests.tribal.gov.in

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி