ஆசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு: விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2025

ஆசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு: விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

 

உதவிப் பே​ராசிரியர் பணிக்​கான 2-ம் கட்ட சிஎஸ்​ஐஆர் நெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் காலஅவ​காசம் அக்​.27-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. பல்​கலைக்​கழகம் மற்​றும் கல்​லூரி​களில் உதவிப் பேராசிரிய​ராக பணிபுரிய​வும், இளநிலை ஆராய்ச்சி படிப்​புக்​கான மத்​திய அரசின் உதவித்​தொகை பெற​வும் நெட் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெறவேண்​டும்.


இந்த தேர்வு தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) சார்​பில் ஆண்​டுக்கு இரு​முறை கணினிவழி​யில் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதில் சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு சில அறி​வியல் பாடப்​பிரிவு​களுக்கு மட்​டும் பிரத்​யேக​மாக நடத்​தப்​படும்.


அதன்​படி நடப்​பாண்டு 2-ம் கட்ட சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு டிச.18-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான விண்​ணப்​பப்​ ப​திவு நேற்றுடன் முடிந்​தது. இந்​நிலை​யில், பல்​வேறு தரப்​பின் கோரிக்​கைகளை ஏற்று விண்​ணப்​பிக்​கும் அவகாசம் அக்​.27-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்து பட்​ட​தா​ரி​கள் /csirnet.nta.ac.in/ என்ற இணை​யதளம் வழி​யாக துரித​மாக விண்​ணப்​பிக்க வேண்​டும். விண்​ணப்​பங்​களில் திருத்​தம் செய்ய அக்​.30, நவ.1-ம் தேதி​களில் வாய்ப்பு வழங்​கப்​படும்.


இந்த தேர்​வானது ஆங்​கிலம், இந்​தி​யில் மட்​டுமே நடை​பெறும். தேர்​வுக்​கான ஹால்​டிக்​கெட் வெளி​யீடு உள்​ளிட்ட கூடு​தல் விவரங்​களை /nta.ac.in/ என்ற வலை​தளத்​தில் அறிந்து கொள்​ளலாம். விண்​ணப்​பிப்​ப​தில் ஏதேனும் சிரமங்​கள் இருப்​பின் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூல​மாக அல்​லது csirnet@nta.ac.in எனும் மின்​னஞ்​சலில் தொடர்​பு​கொண்டு விளக்​கம்​ பெறலாம்​ என்​று என்​டிஏ வெளி​யிட்​ட செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி