காலாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைந்தவர்களுக்கு சிறப்பு வகுப்பு தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசிக்க முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2025

காலாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைந்தவர்களுக்கு சிறப்பு வகுப்பு தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசிக்க முடிவு

 

காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது பற்றி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


தமிழகத்தில் காலாண்டு தேர்வு கடந்த மாதம் முடிந்தது. கடந்தவாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டன. இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்விற்கு தயாரகும் வகையில் இப்போதே பாடங்களை நடத்த ஆசிரியர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். ஆனால், சில மாணவர்கள் காலாண்டுத்தேர்வில் மிககுறைந்த மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இவர்களும் பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் எடுக்க வைக்க கல்வித்துறை சார்பில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட உள்ளது.

மேலும் குறைந்த மதிப்பெண் எடுத்து மாணவர்களை படிப்பில் கவனம் செலுத்த எவ்வித பயிற்சி வழங்கலாம் உள்ளிட்டவை பற்றி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி