தொடக்க கல்வித்துறையில் கடந்தாண்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 'டேப்லெட்'கள் அடிக்கடி பழுதாகி பாடாய்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மாணவர்களுக்கு கணினிசார் கற்றல் கற்பித்தல் பணிக்காக ரூ.80 கோடி மதிப்பில் இடைநிலை, பட்டதாரி என 79 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'டேப்லெட்'கள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர், மாணவர் வருகைப் பதிவு, எமிஸ் தொடர்பான பதிவேற்றப் பணிகள், கல்விச் செயலிகள், மாணவர்கள் விவரம், துறைசார் ஜூம் மீட்டிங்கில் பங்கேற்பது போன்ற நோக்கத்திற்காக இவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் இந்த டேப்லெட்கள் அடிக்கடி முடங்குவது, பழுதாவது போன்ற பிரச்னைகளால் ஆசிரியர்கள் உரிய முறையில் பயன்படுத்த முடியவில்லை. இதனால் அவரவர் வைத்திருக்கும் ஸ்மார்ட் அலைபேசி மூலமே இப்பணிகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக இந்த டேப்லெட்கள் ஓல்டு வெர்சனாகவும், ஒரு ராம் 1 ஜி.பி., கொண்டதாகவும் உள்ளதால் அவற்றை அதிகாரிகள் பல்வேறு நிலைகளில் பயன்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. இதன் மூலம் ரூ.பல கோடி வீணடிக்கப்பட்டுவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
One gb ram nu epo da kandu pudippinga.... File case....
ReplyDelete