School Morning Prayer Activities - 31.10.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2025

School Morning Prayer Activities - 31.10.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.10.2025

திருக்குறள் 

குறள் 485: 


காலங் கருதி இருப்பர் கலங்காது 

ஞாலங் கருது பவர். 


விளக்க உரை: 


உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.


பழமொழி :

The ladder of success is climbed step by step. 


வெற்றியின் ஏணி படிப்படியாக ஏறப்படும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.செல்லும் இடமெல்லாம் அன்பு, ஒழுக்கம், நேர்மை எனும் விதைகளை விதைத்துச் செல்வேன்.


2.அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


முடியுமா நம்மால்? 'என்பது தோல்விக்கு முன் வரும் தயக்கம்.' முடித்தே தீருவோம்' என்பது வெற்றிக்கான தொடக்கம் -கலைஞர். மு .கருணாநிதி


பொது அறிவு : 


01.தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் எது?


தஞ்சாவூர்- காவிரி படுகை பகுதிகள்


02. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?


திரு. ராஜகோபாலச்சாரி


English words :


educate-instruct


eject-expel


தமிழ் இலக்கணம்: 


 உரிச்சொல் என்பது ஒரு பெயர்ச்சொல்லுக்கோ அல்லது வினைச்சொல்லுக்கோ உரியதாக, அதன் பண்புகளை விளக்கி நிற்கும் சொல் ஆகும்.


மற்ற சொற்களுடன் இணைந்து அதன் பொருளை சிறப்பிக்கின்றன.


 எடுத்துக்காட்டாக, நல்ல மாணவன் என்பதில் 'நல்ல' என்ற உரிச்சொல் 'மாணவன்' என்ற பெயர்ச்சொல்லின் பண்பை விளக்குகிறது.


 அழகிய மயில்

 

அழகிய என்பது மயிலின் அழகு தன்மையை குறிக்கிறது


அறிவியல் களஞ்சியம் :


 நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.


நமது மூளை 80% நீரால் ஆனது.


நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.


அக்டோபர் 31


இந்திரா காந்தி அவர்களின் நினைவுநாள்


இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார்.

பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.


நீதிக்கதை


 ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன் ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு ஆசை, தாங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது. 


ஆண்முதலை யோசித்தது என்ன செய்வதென்று. திடீரென ஒரு யோசனை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்போம். அவனும் வருவான் அவனை கொன்று இதயத்தை சாப்பிடு என கூறியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம். அடுத்த நாள் ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்து முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது. 


நடு ஆற்றில் சென்று கொண்டிருக்கும் போது ஆண் முதலை கூறியது நான் உன்னை என்ன செய்ய போகிறேன் தெரியுமான்னு கேட்டது. அப்பாவி குரங்கு விருந்துக்கு தானே அழைத்தாய் என்றது. 


முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னை அழைத்து செல்கிறேன் என கூறியது. சற்று குரங்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது. 


சற்று யோசித்த குரங்கு, அடடா என்ன நண்பா இதை முன்னாடியே சொல்லகூடாதா? நேற்று நான் என் இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே இருப்பதாக கூறியது. 


முதலையும் அப்படியா வா திரும்பி போய் எடுத்துகொண்டு வரலாம் என திரும்பவும் கரைக்கு வந்து விட்டது. தப்பித்த குரங்கு முதலையிடம் கூறியது, முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொல்ல பார்கிறாயான்னு சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி சென்றது. 


நீதி :


நமக்கு ஒரு இடத்தில் துன்பம் ஏற்படப்போகிறது என முன்னதாகவே தெரிந்தால், அந்த துன்பம் தன்னை வந்தடைவதற்கு முன்னால் சிந்தித்து அதிலிருந்து விடுபட வேண்டும்.


இன்றைய செய்திகள் - 31.10.2025


⭐ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து வால்பாறைக்கும் 

இ-பாஸ் கட்டாயம். மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.


⭐ நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம்-மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.


⭐ சீனப் பொருட்கள் மீதான வரியை 10% குறைத்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.


⭐ அரிய பூமி தாதுக்களை அமெரிக்காவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா சம்மதம்.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀 மகளிர் உலக கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.


Today's Headlines


⭐E-pass mandatory for Ooty, Kodaikanal, and Valparai. District administration announces.


 ⭐ A fine of Rs. 5000 will be imposed if a license is not obtained to keep dogs and cats— this was the resolution passed at the Municipal Council meeting.


⭐ US President Trump reduced tariffs on Chinese goods by 10%.


⭐ China agrees to resume exports of rare earth minerals to the US.


 SPORTS NEWS 


🏀 Women's World Cup: Australia wins the toss and will bat against India.

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி