TTSE தேர்வுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2025

TTSE தேர்வுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!


2025-2026ஆம் கல்வியாண்டிற்கான " தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு நாளை ( 11.10.2025 ) முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மாநிலம் முழுவதிலும் 950 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது . மொத்தம் 2,70,508 மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவ / மாணவியர் இத்தேர்வினை எழுதுகின்றனர். 
இத்தேர்வில் முதன்மை மதிப்பெண்கள் பெறும் 1500 மாணவ / மாணவியர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளி கல்வி இயக்ககம் மூலமாக மாதந்தோறும் ரூ .1500 / - வீதம் இரண்டு வருடங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் . இத்தேர்வில் 50 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்களும் மிதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி