சிறப்புத் தகுதித்தேர்வு குறித்து இன்றைய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முன்வைக்கப்பட ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள்.
1. தேர்வு மதிப்பெண் குறைக்கப்பட வேண்டும்.
2. TET தேர்வு எழுத வேண்டிய நிலையில், பத்தாம் வகுப்பிற்குப் பிறகு SGTT என்ற ஆசிரியர் படிப்பைப் படித்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் இணையம் மாற்றியமைக்கப்பட வேண்டும். SGTT படித்தவர்களுக்கு தனியாக +2 சான்று கிடையாது. எனவே அவர்கள் விண்ணப்பிப்பதில் சிரமம் உள்ளது. எனவே இக்கருத்து முன்வைக்கப்படுகிறது.
3. TET Paper 2 விண்ணப்பிக்க பட்டப்படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண் கேட்கப்படுகிறது. TRB இணையம் கோரும் பட்டப்படிப்பின் தேர்வு சதவீதம் இல்லாததால், விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டது. சிறப்புத் தகுதித் தேர்வில் Paper 2 விண்ணப்பிக்கையில் பட்டப்படிப்பின் மதிப்பெண் சதவீதம் கேட்கப்படுவது தவிர்க்கப்பட்டால், விண்ணப்பிப்பது எளிதாக இருக்கும்.
4. +2 சான்று, Degree percentage போன்றவைகளால் வரும் சிக்கல்களைத் தவிர்க்க, EMIS ID மட்டும் கேட்கப்பட்டால், பல சிரமங்கள் தவிர்க்கப்படும்.
5. பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கேற்ப வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.

அருமை, தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 20 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி, இதுவரை 10, 12 வருடங்களாக படித்த காரணத்தால் உபரி மதிப்பெண் 10 என்றும் வினாத்தாளை 5 ஆம் வகுப்பு வரை உள்ள பாடதிற்கேற்ப அமைக்க உத்தரவிட வேண்டும் 🙈🙉🙊
ReplyDeleteஅந்ததந்த பாடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். சிறப்பு தகுதி தேர்வு உச்சநீதிமன்றம் ஒத்துழைக்க மாட்டாங்க.அனைவருக்கும் தேர்வு ஒரே மாதிரியான இருக்க அறிவுறுத்தல் செய்யும் . தேர்வுக்கான பாடத்திட்டம் அந்தந்த major ல் வைத்தாலே அவர்கள் பாஸ் ஆகிறுவாங்க. தகுதி தேர்வில் பிற பாடங்கள் கேட்பதால் பிரச்சனை. நடந்த முடிந்த தேர்விற்கான கட் ஆப் குறைக்க வேண்டும்.
ReplyDelete