SSTA-காலவரையற்ற ஊதியமீட்பு போராட்டம் அறிவிப்பு
2009-க்கு பின் நியமிக்கப்பட்ட 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்குவோம் என திமுக அரசின் தேர்தல் அறிக்கை 311 இல் வாக்குறுதி அளித்து நான்கரை ஆண்டுகளாகியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.*
*கடந்த செப்டம்பர்-2025 ல் 48 மணி நேர போராட்டம் அறிவித்ததை அடுத்து பேச்சுவார்த்தையில் விரைவில் முடிவு செய்வதாக உறுதி அளித்தும் இதுவரை செய்யாமல் தொடர்ந்து கால தாமதம் செய்வதால் SSTA இயக்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது.*
_முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட 20,000 ஆசிரியர்களும் டிசம்பர் 1 முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்வது._
_இரண்டாவது கட்டமாக டிசம்பர் -5 ல் தலைநகரில் பேரணி._
_மூன்றாம் கட்டமாக டிசம்பர் -24 முதல் தொடர் ஊதிய மீட்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது._
_தமிழக முதல்வர் இனியும் காலதாமதப்படுத்தாமல் இந்த பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக கரம் பற்றி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்._
தகவல் பகிர்வு
_SSTA- மாநில தலைமை_


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி