தமிழகம் முழுவதும் 297 அரசுப் பள்ளிகளில் இனி குளுகுளு வகுப்பறை; 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்: ஸ்டாலின் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2025

தமிழகம் முழுவதும் 297 அரசுப் பள்ளிகளில் இனி குளுகுளு வகுப்பறை; 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்: ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசின் 'குளிர் கூரைத் திட்டம்' (Cool Roof Initiative) தமிழ்நாடு முழுவதும் உள்ள 297 பசுமைப் பள்ளிகளுக்கு (Green Schools) விரிவுபடுத்தப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.


தமிழ்நாட்டில் தட்பவெப்பநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்கும் முன்னோடித் திட்டங்கள் குறித்து விவாதிக்க, தமிழ்நாடு ஆளுமைக் குழுவின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம், நேற்று (டிசம்பர் 17) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குத் தலைமை வகித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு முக்கியத் திட்டங்களை அறிவித்தார்.

 

குளிர் கூரைத் திட்டம் விரிவாக்கம்: 



இந்த கூட்டத்திற்குத் தலைமை வகித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசின் 'குளிர் கூரைத் திட்டம்' (Cool Roof Initiative) தமிழ்நாடு முழுவதும் உள்ள 297 பசுமைப் பள்ளிகளுக்கு (Green Schools) விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார்.



இத்திட்டத்தின் முன்னோட்டமாக, அம்பத்தூர் அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கூரைகளில் வெப்பத்தை எதிரொலிக்கும் வெள்ளைச் சாயம் பூசப்பட்டது. சென்சார்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதில், உள்ளறையின் வெப்பநிலை 1.5 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் வெற்றியின் அடிப்படையில், 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு தட்பவெப்ப மாற்றத் திட்டச் செயல் வரைவில் இந்தத் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.


விழிப்புணர்வு முகாம் கால அளவு அதிகரிப்பு: 


பள்ளி மாணவர்களுக்கான கோடை மற்றும் குளிர்காலச் சிறப்பு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்கள், இனிமேல் ஒரு நாள் முகாமாக இல்லாமல், இரண்டு நாள் முகாம்களாக நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாவட்ட தட்பவெப்ப மாற்றத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் இந்த முகாம்கள், இனி பள்ளி கல்வித் துறை மூலமாக விரிவுபடுத்தப்படும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி