NMMS தேர்வு - 2026 அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2025

NMMS தேர்வு - 2026 அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு வெளியீடு!

2025-2026 - ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் , 2026 ஜனவரி மாதம் 10 –ஆம் தேதி ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு ( NMMS ) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது . தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் ( Block Level ) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 10.01.2026 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது.

 இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை 12.12.2025 முதல் 15.12.2025 வரை இத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் ( Download ) செய்து கொள்ளலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் Online கட்டணத் தொகை ரூ .50 / - சேர்த்து , தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.12.2025 . காலஅவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி