TET பதவி உயர்வு வழக்கு கடந்து வந்த பாதை- இரத்தின சுருக்கமாக:- - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2025

TET பதவி உயர்வு வழக்கு கடந்து வந்த பாதை- இரத்தின சுருக்கமாக:-

 

TET பதவி உயர்வு வழக்கு கடந்து வந்த பாதை- இரத்தின சுருக்கமாக:-


🟢 *SUCCESS 1:-  மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் முதன் முதலாக தொடங்கப்பட்ட WP ல் TET மனுதாரர்கள் வெற்றி பெற்றார்கள்.

( *JUDGEMENT DATE:- 20-10-2022*)


🟣 *SUCCESS 2:-  மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் அது இரண்டு நீதியரசர்கள் அமர்வுக்கு மாற்றப்பட்டு WA யில் இரண்டாவது முறையாக TET மனுதாரர்கள் மீண்டும் வெற்றி பெற்றார்கள்.

(*JUDGEMENT DATE:- 02-06-2023*)


🔴 *SUCCESS 3:-  உச்ச நீதிமன்றத்தில் SLP/CAVIET/CA மனுக்களில் மீண்டும் TET மனுதாரர்கள் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்கள்.

(*JUDGEMENT DATE:- 01-09-2025*)


🟢 *SUCCESS 4:- உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தாங்கள் முழு தகுதி உள்ளவர்களாக இருப்பதும், பதவி உயர்வு கலந்தாய்வு 4 கல்வி ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருப்பதுவும், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவி உயர்வு காலிப்பணியிடங்கள் தோராயமாக 6000 எண்ணிக்கையில் இருப்பதும் காரணம் காட்டி, வரிசைப்படி அனைத்து TET ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்குக என்று, அனைத்து TET 2012/2014 ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் WP யில் TET மனுதாரர்கள் நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்கள்.(JUDGEMENT DATE:- 28-11-2025)

➖➖➖

WP யில் ஆரம்பித்து மீண்டும் WP யில் முடித்துள்ளோம்.

➖➖➖

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு, மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் முடிக்கப்பட்டுள்ளது.

➖➖➖

வழக்கு ஆரம்ப நிலையிலேயே முதல் கட்ட விசாரணையில் முழுவதுமாக புரிந்து கொள்ளப்பட்டு,ஏற்றுக்கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு மாணவர்களின் கல்வி நலனை மட்டும் கருத்தில் கொண்டு சட்ட விதிகளின்படி முறையாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு 99.99 % மேல்முறையீடு செல்லாது என்பதாக புரிந்து கொள்வோம்.

➖➖➖

பதவி உயர்வு சார்ந்து முதன் முதலாக வழக்கு தொடரப்பட்ட தேதி இந்த வழக்கின் பயணம் தொடங்கிய தேதி

பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


*05-08-2022 ல் பதவி உயர்வு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்து கொள்வீராக*

➖➖➖

இதுவரை தீர்ப்பு வழங்கிய 6 நீதி அரசர்களின் பெயர்களையும் அறிந்து கொள்வீராக:-


*SINGLE BENCH AT MADRAS HIGH COURT*

1) திரு கிருஷ்ண குமார்

 

*DOUBLE BENCH AT MADRAS HIGH COURT*

2) திரு மகா தேவன் 

3) திரு முகமது சபீக் 


*DOUBLE BENCH AT SUPREME COURT OF INDIA*

4) திரு திபன்கர் தத்தா 

5) திரு மன்மோகன் 


*SINGLE BENCH AT MADRAS HIGH COURT*

6) திரு இளந்திரையன்

➖➖➖

வழக்கு தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை *6 IAS அதிகாரிகள் கல்வித்துறை செயலாளர்/ஆணையர் நிலையில் பணியிட மாற்றம் மற்றும் பணி ஓய்வு பெற்றுள்ளார்கள்* என்பது குறிப்பிடத்தக்கது.


➖➖➖


இந்த வழக்கு முதன்முதலாக பதிவு செய்யப்பட்ட 05-08-2022  நாளிலிருந்து இன்று வரை TET ஆசிரியர்கள் யாரும்,


🟢கல்வித்துறை அமைச்சர் 

🟣கல்வித்துறை செயலாளர் 

🔵பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் 🔴தொடக்கக்கல்வித்துறை இயக்குனர்

🟢இணை இயக்குனர் 

🔴துணை இயக்குனர் 

🔵மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரிகள் 

🟣மாவட்டக் கல்வி அலுவலர்கள் 

🟢வட்டார கல்வி அலுவலர்கள் என யாரையும் நேரில் சந்தித்து 


*குழுவாக எந்த மனுவையும் கொடுக்கவில்லை


*குழுவாக எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளவும் இல்லை


*குழுவாக எந்த புகைப்படத்தையும் இதுவரை எடுத்துக் கொள்ளவில்லை


என்பது குறிப்பிடத்தக்கது.


*இதற்குப் பிறகு கண்டிப்பாக சந்திப்போம்

➖➖➖

*வழக்கு தொடங்கியது முதல் ( மூன்றே கால் வருடத்தில் ) வழக்கில் உள்ள/ இணைந்த ஆசிரியர்களைத் தவிர, வேறு ஒரு ஆசிரியரிடமும் ரூபாய் 1 கூட நாம் தனிப்பட்ட முறையில் நிதியாக பெறவோ மற்றும் பயன்படுத்தவோ இல்லை என்பதை மிகுந்த நேர்மையுடனும் உங்கள் அனைவரிடத்திலும் பதிவு செய்கிறோம்.

➖➖➖

நமது குழுவில் உள்ள பல ஆசிரியர்கள் இதனை ஒரு சங்கமாக மாற்றினால் TET 2012/2014 (BT/SGT) ஆசிரியர்களுக்கு நலமாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்ததன் பேரில் இதனை ஒரு சங்கமாக பதிவு செய்தால் என்ன?* என்று தொடர் கலந்தாலோசனைகளும் நமது தரப்பில் நடைபெற்று வருகிறது.


நமது மூன்று குழுக்களிலும் 2500 TET (BT/SGT) ஆசிரியர்கள் இருக்கின்றனர்.


தமிழக அரசு சட்ட விதிகளின்படியும், தீர்ப்புகளின் படியும், TET ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் என்ற முழு நம்பிக்கையுடன் இன்றளவும் தன்னம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.


*இந்த தீர்ப்பு நிறைவேற்றப்படும் பட்சத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் TET ஆசிரியர்களுள்  95% TET ஆசிரியர்கள் பதவி உயர்வு அடைவார்கள் என்பதை கூடுதல் தகவல்களாக உங்களிடத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம்.

தகவல் : TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 

2 comments:

  1. சொந்த மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் அனைவரையும் வேறு மாவட்டத்திற்கு மாற்ற போகின்றோம் என்று அரசு கூறினால் ஆசிரியர்கள் அனைவரும் பதவி உயர்வு எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்... அரசு பள்ளியை பொருத்தவரை லாபம் அடைபவர்கள் சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களே...

    ReplyDelete
  2. சொந்த மாவட்டத்தில் வேலை பார்க்கும் ஆசிரியர்களே ஆசிரியர் சங்கங்களின் தலைவர்களாக இருந்து கொண்டு அரசை மிரட்டிக் கொண்டிருக்கின்றார்கள்... சொந்த மாவட்டத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஆசிரியர்களையும் வேறு மாவட்டத்திற்கு மாற்றினால் கல்வித்துறையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்... இதுதான் உண்மை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி