திறன் ( THIRAN ) - மண்டல வாரியாக ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2025

திறன் ( THIRAN ) - மண்டல வாரியாக ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

 

திறன் ( THIRAN ) முன்னேற்றம் சார்பாக குறிப்பிட்ட மாவட்டங்கள் மண்டல வாரியாக முதற்கட்டமாக 12.02.2025 முதல் 22.12.2025 வரை 9 நாட்களுக்கு ( 13.12.25 மற்றும் 20.12.2025 ஆகிய இரண்டு சனிக்கிழமைகள் உட்பட ) மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள நிருவாக குழு உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையில் காணொளி மூலமாக குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணைப்படி நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது . எனவே , மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள நிருவாக குழு உறுப்பினர்கள் அனைவரும் திறன் ( THIRAN ) சார்ந்த மாணவர்களின் தற்போதைய முன்னேற்ற விவரங்களுடன் காணொளி வாயிலாக ( GOOGLE MEET ) பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையிலும் , மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் ( District Monitoring Officers ) பங்கேற்புடனும் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் முதன்மைக் கல்வி பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த மாவட்ட அலுவலர்கள் அறிவுறத்தப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி