TNPSC - DEO முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: 2026 மார்ச்சில் பிரதான தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2025

TNPSC - DEO முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: 2026 மார்ச்சில் பிரதான தேர்வு

 டிஎன்பிஎஸ்சி நடத்​திய டிஇஓ முதல்​நிலைத் தேர்வு முடிவு​கள் நேற்று வெளி​யிடப்​பட்​டன. பிர​தான தேர்வு மார்ச் மாதம் நடை​பெறவுள்ளது.


இது தொடர்​பாக டிஎன்பிஎஸ்சி தேர்​வுக் கட்​டுப்​பாட்டு அலு​வலர் சண்​முகசுந்​தரம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மாவட்​டக் கல்வி அதி​காரி (டிஇஓ) பதவி அடங்​கிய குரூப்​-1சி பிரி​வில் முதல்​கட்​ட​மான முதல்​நிலைத் தேர்வு கடந்த 2024 ஜூலை 12-ம் தேதி நடை​பெற்​றது.


இத்​தேர்​வின் முடிவு​கள் தற்​போது வெளி​யிடப்​பட்​டுள்​ளன. அடுத்த கட்ட தேர்​வான பிர​தான (மெ​யின்) தேர்​வுக்கு தற்​காலிக​மாக அனு​ம​திக்​கப்​பட்​டுள்ள தேர்​வர்​களின் பதிவெண் பட்​டியல் (பொதுப் பிரிவு மற்​றும் பணி​யில் உள்ள ஆசிரியர் பிரிவு) தேர்​வாணைய இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) வெளி​யிடப்​பட்​டுள்​ளது.


பிர​தான தேர்வு 2026 மார்ச் 12 முதல் 15-ம் தேதி வரை சென்​னை​யில் மட்​டும் நடை​பெறும். அந்த தேர்​வுக்கு தகுதி பெற்​றுள்ள தேர்​வர்​கள், தேர்​வுக் கட்​ட​ணம் ரூ.200-ஐ டிசம்​பர் 15 முதல் 19-ம் தேதி வரை ஆன்​லைனில் செலுத்​தலாம்.


முதல்​நிலைத் தேர்வு தேர்ச்சி குறித்து தேர்​வர்​களுக்கு மின்​னஞ்​சல், குறுஞ்​செய்தி வாயி​லாக மட்​டுமே தெரிவிக்​கப்​படும் என்று கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி