24 வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2026

24 வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்...

 

24 வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்...

சம வேலைக்கு, சம ஊதியம்' கோரி, சென்னையில் 24ம் நாளாக போராட்டம் நடத்திய, இடைநிலை ஆசிரியர்களை, தர தரவென இழுத்து சென்று, போலீசார் கைது செய்தனர்.தமிழக பள்ளிக்கல்வித் துறையின், அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், 'சம வேலைக்கு, சம ஊதியம்' வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், கடந்த மாதம் 26ம் தேதி முதல், சென்னையில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் முன்னிலையில், கடந்த 14ம் தேதி பேச்சு நடந்தது. ஆனால், உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து, சென்னை கலெக்டர் அலுவலம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை பகுதிகளில் போராட்டம் நடத்தினர். இன்று 24வது நாளாக, இடைநிலை ஆசிரியர்கள், சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை மேம்பாலத்தில், 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.சாலையில் அமர்ந்து போராடிய ஆசிரியர்களை, போலீசார் குண்டு கட்டாகவும், வர மறுத்தவர்களை, தரதரவென இழுத்து சென்றும் கைது செய்தனர். திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.

1 comment:

  1. கொடுத்த வாக்குறுதி என்ன அர்த்தத்திற்கானது என்பதே சவப்பயலுக்கு தெரியாது.. எவனோ எழுதி கொடுத்தால் அதை அப்படியே வாசிக்க வேண்டிய து.... அழியட்டும் தீயசக்தி.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி