மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை படி, அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான நடைமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016ன் படி, அரசு நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகள் பணியாற்ற ஏற்ற பணியிடங்களை அரசு அடையாளம் காண வேண்டும் என்பது கட்டாயமாகும். இதன் தொடர்ச்சியாக, 2023 மற்றும் 2025 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணைகள் மற்றும் கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி நடந்த நிபுணர் குழு கூட்டத்தின் பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசு பரிசீலனை செய்துள்ளது.
அதன் அடிப்படையில், தலைமைச் செயலக சேவையில் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்தமான பணியிடங்களை அடையாளம் காண அரசு முடிவு செய்துள்ளது. உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், பிரிவு அலுவலர், துணை செயலாளர், தனிப்பட்ட எழுத்தர், மூத்த தனிப்பட்ட எழுத்தர், தனிப்பட்ட உதவியாளர், தனிச்செயலாளர், மூத்த தனிச்செயலாளர், பதிவுக் க்ளார்க், பதிவு உதவியாளர், தட்டச்சர் மற்றும் மூத்த தட்டச்சர் ஆகிய பணியிடங்கள் இதற்காக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பணியிடங்களில் பார்வை குறைபாடு, குறைந்த பார்வை, செவித்தடை, உடல் இயக்கக் குறைபாடு, நரம்பியல் மற்றும் மனநல குறைபாடுகள் உள்ளிட்ட மாற்றுத் திறன் வகைகள் பணியிடத்திற்கேற்ப பதவிகள் வழங்கப்படும். குறிப்பாக, தட்டச்சர் மற்றும் மூத்த தட்டச்சர் பணியிடங்களுக்கு, எழுத்துப் புரிதல், சரியான தட்டச்சு மற்றும் கணக்கீட்டு திறன் அவசியம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தலைமைச் செயலக சேவையில் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்தமான பணியிடங்களை அடையாளம் காண அரசு முடிவு செய்துள்ளது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி