தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு மத்திய கல்வி அமைச்சர் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2026

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு மத்திய கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

 

தாய் மொழி​யில் பயிற்​று​விப்​பதை ஊக்​குவிக்​கும் வகை​யில் தேசிய கல்விக் கொள்​கையை அமல்​படுத்த வேண்​டும் என்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் கூறி​னார்.

ராமேசுவரத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற காசி தமிழ் சங்​கமம் நிறைவு விழா​வில் பங்​கேற்ற பின்​னர் நேற்று மதுரை வந்த அவர், மீனாட்சி அம்​மன் கோயி​லில் குடும்​பத்​தினருடன் சுவாமி தரிசனம் செய்​தார். கோயில் நிர்​வாகம் சார்​பில் மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தானுக்கு மரி​யாதை செய்​யப்​பட்​டது. பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:


தேசிய கல்விக் கொள்​கை​யானது 5-ம் வகுப்பு வரை மாநிலங்​களின் தாய் மொழி​யிலேயே பயிற்​று​விக்க வேண்​டும் என வலி​யுறுத்​துகிறது. தமிழகத்​தி​லும் 5-ம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழி​யாக இருக்க வேண்​டும் என்று பரிந்​துரைப்​ப​தால், தமிழக அரசு தேசிய கல்விக் கொள்​கையை அமல்​படுத்த வேண்​டும்.

தேசிய கல்விக் கொள்கை என்​பது மத்​திய அரசுக்​கும், தமிழகத்​தில் உள்ள திமுக அரசுக்​கும் இடையே சர்ச்​சைக்​குரிய விஷய​மாக இருந்து வரு​கிறது. தமிழகத்​தில் 5-ம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழி​யாக இருக்க வேண்​டும் என்​பது​தான் தேசிய கல்விக் கொள்​கை​யின் பரிந்​துரை. இதை ஏற்​று, திமுக அரசு தமிழ் மொழியை ஊக்​குவிக்​கும் என்று நம்​பு​கிறேன்.


மும்​மொழிக் கொள்​கை​யின் கீழ் இந்தி திணிக்​கப்​படு​வ​தாகக் கூறி, தமிழக அரசு தேசிய கல்விக் கொள்​கையை எதிர்த்து வரு​கிறது. மத்​திய அரசின் தேசிய கல்விக் கொள்​கையை எதிர்க்​கும் வகை​யில், தமிழக அரசு இரு மொழிக் கொள்​கை​யாக மாநிலக் கல்விக் கொள்​கையை வெளி​யிட்​டது. மத்​திய அரசுக்​கும், மாநில அரசுக்​கும் இடையே​யான இந்த மோதல், உச்ச நீதி​மன்​றத்​தை​யும் எட்​டி​யுள்​ளது.

நவேதயா பள்ளிகள்… டிச. 15-ல் உச்ச நீதி​மன்​றம் தமிழகத்​தில் நவோதயா பள்​ளி​களை அமைப்​பது தொடர்​பான விவ​காரத்​தில் மத்​திய அரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​மாறு தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டது. பள்​ளி​கள் அமைப்​ப​தற்​குத் தேவை​யான நிலத்தை ஒதுக்​கீடு செய்​யு​மாறும் உத்​தர​விட்​டது.


கலை, பண்​பாடு, கலாச்​சா​ரத்​துக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் பிரதமர் மோடி​யின் ஆலோ​சனைப்​படி காசி தமிழ் சங்​கமம் 4.0 விழாவை வெற்​றிகர​மாக நடத்தி முடித்​துள்​ளோம். இது காசிக்​கும், ராமேசுவரத்​துக்​கும் இடையி​லான நாகரி​கப் பிணைப்​பாகும். எதிர்​காலத்​தில், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ அமைய​வும் வழி​வகுக்​கும்.

திருப்​பரங்​குன்​றம் மலை மீது தீபம் ஏற்​றலாம் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும், தமிழக அரசு அரசி​யல் காழ்ப்​புணர்​வோடு செயல்​படு​கிறது.

இந்​துக்​கள் புனித​மாகக் கருதும் திருப்​பரங்​குன்​றம் மலை மீது தீபம் ஏற்​று​வதை தடுப்​பவர்​களுக்கு சிவபெரு​மான் பாடம் புகட்​டு​வார். திருப்​பரங்​குன்​றம் மலை மீது தீபம் ஏற்​று​வதை யாராலும் தடுக்க முடி​யாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

தொடர்ந்​து, மதுரை கூடலழகர் பெரு​மாள் கோயில், அழகர்​கோ​வில் கள்​ளழகர் கோயி​லில் மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் சுவாமி தரிசனம் செய்​தார்.

3 comments:

  1. 2000000 ஆசிரியர்களுக்கு அவரால் எதுவும் 4 மாதங்களாக சொல்ல முடியவில்லை அதை முதலில் சொல்லுங்கள் முதலில் தகுதி தேர்வு தேவையா இல்லையா

    ReplyDelete
  2. தகுதி தேர்வு தேவை என்றால் நடத்துங்கள் தேவை இல்லை என்றால் விட்டு விடுங்கள் ஏன் எதுவும் சொல்லாமல் ஆசிரியர்களை மன உளைச்சலில் பதட்டத்திலேயே வைத்திருக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. minority na illa,avanga urimaila thalaiyida mudiyathu, enna kodumai ithu, apo majority ellam enga pogurathu, '
      once if its rule, it must be for all.....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி