பள்ளி சத்துணவு 'மெனு'வில் மாற்றம் மாணவர்கள் விரும்பியது சேர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2026

பள்ளி சத்துணவு 'மெனு'வில் மாற்றம் மாணவர்கள் விரும்பியது சேர்ப்பு

 

சத்துணவு திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கீரை சாதம், வெஜ் பிரியாணிக்கு மாற்றாக, காய்கறி சாம்பார், கீரை சேர்க்கப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்ய, சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளுக்கு ஏற்ப, அவ்வப்போது சிறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில், சமூக நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில், முதல் மற்றும் மூன்றாம் வார உணவு பட்டியலில் மாற்றம் செய்து, அத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல் மற்றும் மூன்றாம் வார மெனுவில், திங்கள் வெஜ் பிரியாணி, வெள்ளிக் கிழமை கீரை சாதம் வழங்கப்பட்டன. இவற்றை மாணவர்கள் விரும்பவில்லை. எனவே, அவற்றுக்கு பதிலாக, மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, உணவில் பருப்பு சேர்க்கப்பட்டு உள்ளது. 


அதன்படி, திங்கள் கிழமை சாதம், காய்கறி சாம்பார்; வெள்ளிக் கிழமை சாதம், கீரை கூட்டு, சாம்பார் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வாயிலாக, மாணவர்களின் விருப்பம் பூர்த்தி செய்யப்படும். அவர்களுக்கு தேவையான புரதம், சத்துக்கள் கிடைக்கும் என, சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி