ஆளுநர் திருப்பி அனுப்பிய கூட்டுறவு சங்க மசோதா மீண்டும் நிறைவேற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2026

ஆளுநர் திருப்பி அனுப்பிய கூட்டுறவு சங்க மசோதா மீண்டும் நிறைவேற்றம்

 

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட, கூட்டுறவுச் சங்கங்களுக்கு இடைக்கால செயலாட்சியர் நியமித்தல் உட்பட மொத்தம் 10 சட்ட மசோதாக்கள் சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் திருத்தச் சட்டமுன் வடிவை 2024 டிச.10-ல் அமைச்சர் பெரிய கருப்பன் கொண்டு வந்தார். இந்த மசோதா பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்தாண்டு ஜூன் 16-ம் தேதி திருப்பி அனுப்பினார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் நேற்று அந்த மசோதாவை அமைச்சர் பெரியகருப்பன் மீண்டும் தாக்கல் செய்தார். இறுதியில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட கூட்டுறவுத் திருத்தச் சட்டம் உட்பட மொத்தம் 10 சட்ட மசோதாக்கள் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அவை ஆளுநரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி