முழு ஆண்டுத் தேர்வு வரை திறன் இயக்கம் பயிற்சிகள் நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடப்பு கல்வியாண்டு (2025-26) பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடத்திறன் மற்றும் கணிதத்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் திறன் இயக்கப் பயிற்சி கடந்த ஜூலை மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆசிரியர்களின் தொடர் முயற்சியால் தேர்வில் 68 சதவீத மாணவர்கள் அடிப்படை கற்றல் விளைவுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்னும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால் முழு ஆண்டுத் தேர்வு வரை திறன்பயிற்சி நீட்டிக்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும் திறன் மாதாந்திர மதிப்பீட்டில் பங்குபெற வேண்டும். முழு ஆண்டுத் தேர்வின்போது தமிழ், ஆங்கிலம்,கணித பாடங்களுக்கு திறன் பயிற்சி புத்தகம் சார்ந்த தனி வினாத்தாள் வழங்கப்படும். அதேபோல், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தேர்வுகளுக்கான கேள்விகள், முந்தைய வகுப்புகளில் இருந்து எளிமையானதாக இருக்கும்.
மேலும், திறன் பயிற்சி பெற்ற 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு நிலை பாடங்களுக்குத் தயாராகும் வகையில்,அடுத்த கல்வியாண்டின் முதல் மாதம் பிரிட்ஜ் கோர்ஸ் நடத்தப்படும். இதைப் பின்பற்றி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் செயல்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி