போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் சம்பளத்தை பிடிக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2026

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் சம்பளத்தை பிடிக்க உத்தரவு

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் சம்பளத்தை பிடிக்க உத்தரவு


ஆசிரியர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருவதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது.


பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நலத்திட்ட உதவிகள், கற்பித்தல் பணிகள் முடங்கின.


• கல்வி நலன் பாதிக்கப்படுவதால், பணி இல்லை, ஊதியமும் இல்லை என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


• ஆறாம் தேதியில் இருந்து மருத்துவ காரணமாக விடுமுறை எடுத்த ஆசிரியர்களை தவிர மற்ற ஆசிரியர் விவரங்களை அனுப்ப உத்தரவு


- வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

5 comments:

  1. 12ஆம் வகுப்பிற்குப் பின் இரண்டு வருட பட்டயப் படிப்பிற்குப் இவர்கள் இதே பள்ளிக் கல்வித் துறையில் 7 வருடங்கள் கல்லூரிப் படிப்பை அடிப்படை தகுதியாகக் கொண்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு கிட்டத்தட்ட இணையாக அடிப்படை ஊதியத்தில் 600 ரூ மட்டுமே குறைவாக கொண்ட பழைய ஊதியக்குழு அடிப்படையில் ஊதியம் கேட்கின்றனர்.இது நியாயமா? PG ஆசிரியர்களுக்கு 2009க்குப் பின்பு பணியில் சேர்ந்தோருக்கு மாதம் தோறும் 18000/-ரூ இழப்பு ஏற்பட்டுள்ளது.சம வேலைக்கு சம ஊதியம் எனில் இவர்களின் ஊதிய இழப்பிற்கு ஏற்றார் போல் முன்பு பணியில் சேர்ந்தவர்களின் ஊதியத்தைக் குறைத்தால் இவர்களின்' சம வேலைக்கு சம ஊதியம் 'கோரிக்கை நிறைவேறும். முதுகலை ஆசிரியர்களின் பணிச்சுமையுடன் இவர்களின் பணியை ஒப்பிட முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர்களுக்குள் ஒற்றுமை அவசியம் மைதிலி சகோதரி. அவர்கள் உரிமையே கேட்கின்றனர். உங்கள் உரிமையே அவர்கள் கேட்கின்றனர். மற்ற மாநிலங்களை விட மிக குறைந்த சம்பளம் அதிலும் 2009 க்கு பின்னர் மிக குறைந்த சம்பளம் சக ஆசிரியர்களை காட்டிலும் . ஆகவே தான் சம வேலை சம ஊதியம் கேட்கப்படுகின்றன். ஆகையால் தான் கலைஞர் ஜயா மகன் ஆகிய ஸ்டாலின் ஐயா தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்தார்கள். உங்களுக்கு சம்பளம் கம்மி என்றால் நீங்களும் உரிய முறையில் அரசிடம் கேட்கலாம். மற்றவர்களின் உழைப்பை மட்டம் தட்டாதீர்கள். முதுகலை ஆசிரியர்களை விட சிறு குழந்தைகளுக்கான பாடம் நடத்துவது மற்றும் அவர்களுக்கு உணவு ஊட்டுவது முதல் கழிப்பறை வரை அனைத்தும் சவாலான பணி.

      Delete
  2. ஆசிரியர்களுக்குள் ஒற்றுமை அவசியம் மைதிலி சகோதரி. அவர்கள் உரிமையே கேட்கின்றனர். உங்கள் உரிமையே அவர்கள் கேட்கின்றனர். மற்ற மாநிலங்களை விட மிக குறைந்த சம்பளம் அதிலும் 2009 க்கு பின்னர் மிக குறைந்த சம்பளம் சக ஆசிரியர்களை காட்டிலும் . ஆகவே தான் சம வேலை சம ஊதியம் கேட்கப்படுகின்றன். ஆகையால் தான் கலைஞர் ஜயா மகன் ஆகிய ஸ்டாலின் ஐயா தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்தார்கள். உங்களுக்கு சம்பளம் கம்மி என்றால் நீங்களும் உரிய முறையில் அரசிடம் கேட்கலாம். மற்றவர்களின் உழைப்பை மட்டம் தட்டாதீர்கள். முதுகலை ஆசிரியர்களை விட சிறு குழந்தைகளுக்கான பாடம் நடத்துவது மற்றும் அவர்களுக்கு உணவு ஊட்டுவது முதல் கழிப்பறை வரை அனைத்தும் சவாலான பணி.

    ReplyDelete
  3. கலைஞர் ஐயா ஆட்சியில் வழி வந்த கலைஞர் ஐயா மகன் ஸ்டாலின் ஐயா ஆசிரியர்களுக்கான இவ்வாறான கடுமையான தண்டனை தேவையற்றது. அவர்களுடைய கோரிக்கை நியாயமானது . உடனே அதிகாரிகளிடம் பேசி கோரிக்கை நிறைவேற்றிட வேண்டும் . தேர்தல் நேரம் வேற. தேர்தல் அறிக்கையில் நம்பகத்தன்மை வரும்.

    ReplyDelete
  4. சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களையும் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்தாலே போராட்டம் நின்று விடும்... ஏனெனில் சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களே ஆசிரியர் சங்கங்களை நிர்வகிக்கின்றனர் வழிநடத்துகின்றனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி