ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 20252026 ஆம் நிதியாண்டு அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant)-இரண்டாம் கட்டமாக 50% நிதியை வட்டார வளமையங்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு
Grants IInd INstallment Instructions - Download here
பார்வையில் காணும் மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி, 2025-26ஆம் கல்வியாண்டிற்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு ஒப்புதலின்படி UDISE 2023-24-ன்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அனைத்து அரசு தொடக்க/நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை செய்து பெறப்பட்டுள்ளது எனவும், அதன்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு Elementary:F.01.18, Secondary: F.03.12 என்ற தலைப்பின் கீழ் SNA மூலம் முதல் தவனை தொகையை நிதி வரம்பு நிர்ணயம் (Limit Fixation) செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1374 அரசு தொடக்க/நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 2023-24ஆம் ஆண்டின் UDISE விபரப்படி மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப இரண்டாம் தவனையான 50 சதவீத தொகை ரூ.2,03,32,500/- (ரூபாய் இரண்டு கோடியே மூன்று இலட்சத்து முப்பத்திரண்டாயிரத்து ஐநூறு மட்டும்) இணைப்பில் கண்டுள்ளவாறு அனைத்து வட்டார வள மையங்களின் SNA வங்கி கணக்கிற்கு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு Elementary:F.01.18 (மற்றும்) உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு Secondary:F.03.12 என்ற தலைப்பின் கீழ் SNA மூலம் நிதி வரம்பு நிர்ணயம் (Limit Fixation) செய்து பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி