School Morning Prayer Activities - 23.01.2026 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2026

School Morning Prayer Activities - 23.01.2026

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2026

திருக்குறள் 

குறள் 249: 

பழமொழி :

One step each day changes everything. 

தினமும் ஒரு அடி அனைத்தையும் மாற்றும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி : 

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதே போல மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு - சிக்மன்ட் பிராய்டு

பொது அறிவு : 

01.காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?

மயிலாடுதுறை - பூம்புகார் 
Mayiladuthurai -Poompuhar


02.இன்சுலினை சுரக்கும் உறுப்பு 
எது?

கணையம் -pancreas

English words :

plaintively-sadly

gloomy-depressing

தமிழ் இலக்கணம்: 

 பொருள்கள் –பொருட்கள் எது சரி என்று பார்ப்போமா? 
இதற்கு ஒருமை பன்மையின் இலக்கண விதியை முதலில் தெரிந்து கொள்வோம். 
குறிலுக்கு அடுத்ததாக வரும் ல்,ள் சொற்கள் பன்மைக்கு மாறும் போது ல் 'ற்' ஆகவும், ள் 'ட்' ஆகவும் மாறும் 
எ.கா –கல் –கற்கள்
சொல் –சொற்கள்
முள் –முட்கள்
புள்.  –புட்கள்
ஆனால் இரண்டு குறில் எழுத்துக்களை அடுத்து வரக்கூடிய ல், ள் ஆகிய எழுத்துக்கள் பன்மையில் எழுதும் போது கள் விகுதி மட்டும் சேர்ந்து வரும்.
எ.கா –விரல் –விரல்கள்
குறள் –குறள்கள்
எனவே பொருள்கள் என்பது தான் சரி.

ஜனவரி 23

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்நாள்



நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897– இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார்.  இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.அதன் சுருக்கம் இதோ

நீதிக்கதை

 சேவலும் இரத்தினக்கல்லும்


ஒரு சேவல் தனக்குத் தேவையான உணவை குப்பையைக் கிளறித் தேடிக் கொண்டிருந்தது. அப்போது அதற்கு ஒரு விலை மதிப்பற்ற இரத்தினக்கல் கிடைத்தது. அதனை பார்த்த சேவலின் குஞ்சு ஒன்று சேவலின் அருகே வந்து ஆவலுடன் அந்தக் கல்லை திருப்பி போட்டது. உடனே சேவல் வருத்தமாக இந்தக் கல் எனக்கு கிடைத்ததனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது. அதுவே ஒரு இரத்தின வியாபாரியின் கைக்கு கிடைத்திருந்தால் இந்தக் கல்லின் மதிப்பு என்னவென்று அவனுக்கு தெரிந்திருக்கும். எனக்கு இந்தக் கல் கிடைத்ததைக் காட்டிலும் இந்த குப்பையிலிருந்து ஒரு தானியம் கிடைத்திருந்தால் அதுவே எனக்குக் கிடைத்த விலை மதிப்பில்லாதப் பொருள் என்று கூறியது சேவல். 


நீதி :

எந்த ஒரு பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் சிறப்பு.

இன்றைய செய்திகள்

23.01.2026

⭐திருவாரூர் பள்ளி மாணவிக்கு டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு. சுதந்திரப்போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திரபோசின் ராணுவப் படையில் சேர்ந்து பணியாற்றிய நீரா ஆர்யா என்ற பெண்மணி குறித்து கட்டுரை எழுதினார்.
மாணவி வைகயோஷனாவுக்கு பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட உள்ளது.

⭐நியூசிலாந்து மலையடிவாரத்தில் பயங்கர நிலச்சரிவு.. மண்ணில் புதைந்த சுற்றுலா முகாம்கள் பலர் மாயம்.

⭐இந்தியாவில் குருகிராமில் தனது முதல் பல்கலைக்கழக வளாகத்தை அமைத்த பிரிட்டிஷ் அரசு, இந்தியாவில் மேலும் 9 கிளைகளை ஆரம்பிக்க உள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரகுமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3 டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

Today's Headlines

⭐A Thiruvarur schoolgirl was invited to participate in the Republic Day celebrations in Delhi. She wrote an article about a woman named Neera Arya, who served in Subhas Chandra Bose's army during the freedom struggle. Vaigayoshana will be awarded a medal and Rs. 10 thousand in cash. 

⭐A terrible landslide in the foothills of New Zealand. Many people are missing from tourist camps buried in the soil.

⭐The British government, which set up its first university campus in Gurugram, India, is set to open 9 more branches in India.

 SPORTS NEWS 

🏀Afghanistan's Mujibur Rahman took 4 wickets in the 2nd T20I against West Indies. He became the 3rd player to take a hat-trick in 3 T20Is

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி