TRB : 2026-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை வெளியாவது எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2026

TRB : 2026-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை வெளியாவது எப்போது?

 

ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) சார்​பில் 2026-ம் ஆண்​டுக்​கான வரு​டாந்​திர தேர்வு கால அட்​ட​வணை வெளி​யிடு​வ​தில் கால​தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தால் ஆசிரியர் பணி தேர்​வுக்கு தயா​ராகி வரு​வோர் ஏமாற்​றம் அடைந்​துள்​ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்​கள், வட்​டாரக்​கல்வி அலு​வலர்​கள், அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி விரிவுரை​யாளர்​கள், அரசு பொறி​யியல் கல்​லூரி உதவி பேராசிரியர்​கள் ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூலம் தேர்வு செய்​யப்​படு​கிறார்​கள். அதே​போல், டெட் தகு​தித்​தேர்​வும் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தால் நடத்​தப்​படுகிறது.

ஓராண்​டில் எந்​தெந்த பணி​களுக்கு என்​னென்ன போட்​டித்​தேர்​வு​கள் நடத்​தப்​படும், அத்​தேர்​வு​களுக்​கான அறி​விப்​பு​கள் எப்​போது வெளி​யாகும், எழுத்​துத் ​தேர்வு எப்​போது நடத்​தப்​படும் ஆகிய விவரங்​கள் அடங்​கிய வருடாந்​திர தேர்வு அட்​டவணையை டிஆர்பி ஆண்​டுதோறும் வெளி​யிடு​கிறது. இவ்​வாறு காலஅட்​ட​வணை வெளி​யிடு​வது, ஆசிரியர் பணி​யில் சேர விரும்​புவோருக்கு முன்​கூட்​டியே திட்​ட​மிட்டு தயா​ராக பெரிதும் உதவி​கர​மாக உள்​ளது.

இந்​நிலை​யில், 2026-ம் ஆண்டு பிறந்து ஜன.16-ம் தேதி ஆகி​யும் இன்​னும் இந்த ஆண்​டுக்​கான தேர்வு அட்​ட​வணையை வெளி​யி​டா​மல் மவுனம் காத்து வரு​கிறது டிஆர்​பி. அதோடு கடந்த 2025-ம் ஆண்டு தேர்வு அட்​ட​வணை​யில் இடம்​பெற்​றிருந்த வட்​டாரக் கல்வி அதி​காரி (பிஇஓ) தேர்​வுக்​கான அறி​விப்​பும் இன்​னும் வெளி​யிடப்​பட​வில்​லை. அந்த அட்​டவணைப்படி இது நவம்​பர் மாதமே வெளி​யிடப்​பட்​டிருக்க வேண்​டும்.

அரசு பணி​களுக்கு ஊழியர்​களை தேர்​வுசெய்​யும் டிஎன்​பிஎஸ்சி 2025-ம் ஆண்டு தேர்வு அட்​ட​வணை​யில் இடம்​பெற்ற அனைத்து தேர்​வு​களை​யும் நடத்தி முடித்​து​விட்​டது. மேலும், 2026-க்​கான தேர்வு அட்​ட​வணையை டிசம்​பரிலேயே வெளி​யிட்​​டது. எனவே, விரை​வில் தேர்வு அட்​ட​வணையை டிஆர்பி வெளி​யிட கோரிக்கை எழுந்துள்ளது​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி