தமிழகம் முழுவதும் 654 அரசு உதவிபெறும் பள்ளிகளில் ரூ.42 கோடியில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2026

தமிழகம் முழுவதும் 654 அரசு உதவிபெறும் பள்ளிகளில் ரூ.42 கோடியில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்

 

அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களின் கல்​வித் தரத்தை உயர்த்​தும் பொருட்டு பள்​ளிக்​கல்​வித் துறை மூலம் பல்​வேறு சிறப்​புத் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களிடம் பிரச்​சினை​களைத் தீர்க்​கும் திறனை வளர்க்​க​வும், குழு​வாக இணைந்து செயல்​படக்​கூடிய திறனை கற்​றுக் கொள்​ள​வும், படைப்​பாற்​றலை வளர்க்​க​வும் முதல்​கட்​ட​மாக ரூ.6.09 கோடி மதிப்​பீட்​டில் 15 இயந்​திர​வியல் ஆய்​வகங்​கள் நிறு​வப்​பட்டு உள்​ளன.

கற்​றல், கற்​பித்​தல் மற்​றும் திட்​ட​மிடல் போன்ற செயல்​முறை​களை மேம்​படுத்​து​வதற்கு தகவல் தொழில்​நுட்​பம் ஒரு முக்​கிய ஊக்​கி​யாக உள்​ளதைக் கருத்​தில் கொண்​டு, அரசு நடுநிலை, உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​களில் ரூ.519.73 கோடி மதிப்​பீட்​டில் 8,209 உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​களும், அரசு தொடக்க, உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​களில் ரூ.455.32 கோடி மதிப்​பீட்​டில் 22,931 திறன்​மிகு வகுப்​பறை​களும் நிறு​வப்​பட்டு மாணவர்​களின் பயன்​பாட்​டில் உள்​ளன.

இந்​நிலை​யில், அரசுப் பள்​ளி​களைப் போல, அரசு உதவி​பெறும் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களுக்​கும் வழங்​கும் நோக்​கில், முதற்​கட்​ட​மாக தமிழகம் முழு​வதும் 654 அரசு உதவி​பெறும் மேல்​நிலைப் பள்​ளி​களில் ரூ.41.85 கோடி மதிப்​பீட்​டில் 654 உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன.

அடை​யாறு குமார ராஜா முத்​தையா மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில், 654 உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​களை பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்​பில் மகேஸ் திறந்​து​வைத்​தார்.

தொடர்ந்து அப்​பள்​ளி​யில் நிறு​வப்​பட்​டுள்ள உயர் தொழில்​நுட்ப ஆய்​வகத்தை பார்​வை​யிட்​டார். இந்த உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​கள் காணொலி, ஒலி மற்​றும் டிஜிட்​டல் கருவி​கள் மூலம் கற்​பித்​தல் மற்​றும் கற்​றலை எளிமை​யாக்​கிப் பாடப் புத்தக உள்​ளடக்​கத்தை விரை​வாக​வும், ஆர்​வ​மாக​வும் கற்​றுக்​கொள்ள உதவும்.

மேலும் 6 முதல் 9-ம் வகுப்​பு​களுக்​கான செயற்கை நுண்​ணறிவு (AI), இயந்​திர​வியல் மற்​றும் குறி​யிடல் (Coding) தொடர்​பான டிஎன் ஸ்பார்க் (TN SPARK) போன்ற திட்​டங்​களை செயல்​படுத்​த​வும் துணைபுரி​யும்.

தொடக்க விழா​வில், எஸ்​எஸ்ஏ மாநில திட்ட இயக்​குநர் எம்​.ஆர்த்​தி, கூடு​தல் இயக்​குநர் எஸ்​.உ​மா, பள்​ளிக்​கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், பெற்​றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலை​வர் பி.​வி.பி.​முத்​துக்​கு​மார், மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​ கபீர்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து​கொண்​டனர்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி