ஆசிரியர்களுக்கு மனநல பயிற்சி: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு.
ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை மனநல நிபுணர்களைக் கொண்டு கட்டாயம் பயிற்சி அளிக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்துப்பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் மனநலம் மற்றும் நல்வாழ்வு மற்றும் சமூக உணர்ச்சி கற்றல் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை மனநல நிபுணர்களை கொண்டு கட்டாயப் பயிற்சிஅளிக்க வேண்டும்.
இதில் மாணவர்களின் மனஅழுத்த அறிகுறிகளை கண்டறிதல், முதலுதவி மனநல சிகிச்சை, சுயபரிசோதனை மற்றும் சரியான மருத்துவ ஆலோசனைக்கு வழிநடத்துதல், மாணவர்களிடம் எவ்வித பாகுபாடின்றி கனிவாக நடந்து கொள்ளுதல் குறித்த பயிற்சி அதில் இடம்பெற வேண்டும்.
இதுதவிர ஆலோசனை குறித்த ஆண்டறிக்கையை பள்ளி நிர்வாகம் தயார் செய்ய வேண்டும். இதன் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும். தனித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் தேர்வு முறைகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யவேண்டும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி