என் பெயர் வினோதா. என் சொந்த ஊர் கடலூர். என் அப்பா ஒரு டைலர், நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள், நான் BE படித்திருக்கிறேன், Edveon Technologies என்ற நிறுவனத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக எனக்கு வேலை கிடைத்துள்ளது.
நான் முதல்வன் திட்டம், எங்கள் கல்லூரியில் கட்டாய திறன் பயிற்சியாக கொண்டுவந்ததின் விளைவாக, நான் முதல்வன் பாட திட்டத்தின் பாடத்திட்டங்களை படித்தோம், அதில் எனக்கு பிடித்த IC Chip Design and Verification பாடத்தை படித்தேன், ஒவ்வொரு semester ளையும் நிறைய பயனுள்ள திறன் பயிற்சிகளை கொடுத்தார்கள், இந்த பாடங்களை வெளியே சென்று படித்தால் 3 லட்சங்கள் ஆகும். நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக கட்டணமில்லாமல் நான் படித்தேன்.
நான் முதல்வன் திட்டத்தின் நிரல் திருவிழா Hackathon அனைத்திலும் பங்குப்பெற்றேன், நிரல் திருவிழா Hackathon மூலமாக Edveon Technologies-ல் Internship-ம் கிடைத்தது, Internship முடிந்து, அதே நிறுவனத்தில் நான் முதல்வன் திட்டத்தால் Chip Designing and Verification Engineer ஆக வேலையும் கிடைத்தது.
நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக நல்ல வேலை கிடைத்ததில் ரொம்ப சந்தோசமா இருக்கேன். என் பொற்றோர்களும் சரி நானும் சரி எனக்கு பிடித்த வேலை இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை, ஏன் என்றால் புதியவர்களுக்கு (fresher) இந்த வேலை அவ்வளவு சுலபாக கிடைக்காது, நான் முதல்வன் திட்டத்தின் மூலமாகத்தான் இந்த வேலை எனக்கு கிடைத்துள்ளது, நான் முதல்வன் திட்டத்திற்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வருக்கும் நன்றி.
மேலும் விவரங்களுக்கு: https://naanmudhalvan.tn.gov.in/

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி