சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2026

சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்​​தி​யா​வில் பல்​கலைக்​கழகம் மற்​றும் கல்​லூரி​களில் உதவி பேராசிரிய​ராக பணிபுரிய​வும், இளநிலை ஆராய்ச்சி படிப்​புக்​கான மத்​திய அரசின் உதவித் தொகை பெற​வும், நெட் தேர்​வில் தேர்ச்சி பெறவேண்​டும்.

இந்த தேர்வு தேசிய தேர்​வுகள் முகமை (என்​டிஏ) சார்பில், ஆண்​டுக்கு இரு​முறை கணினிவழி​யில் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதில், சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு, 5 அறி​வியல் பாடப் பிரிவு​களுக்கு மட்​டும் பிரத்​யேக​மாக நடத்​தப்​படும்.

அதன்​படி, 2025-ம் ஆண்​டுக்​கான சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு நாடு முழு​வதும் 220 நகரங்​களில் கடந்த டிச.18-ல் நடத்​தப்​பட்​டது. இந்த தேர்​வெழுத 2,12,552 பட்​ட​தா​ரி​கள் விண்​ணப்​பித்​தனர். அதில், 1,54,080 பேர் தேர்​வில் பங்​கேற்​றனர்.

இந்​நிலை​யில், சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு முடிவு​களை என்​டிஏ தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. அதன் விவரங்​களை தேர்​வர்​கள் csirnet.nta.ac.in/ என்ற இணை​யதளத்​தில் அறியலாம்.

மேலும், பட்​ட​தா​ரி​கள் மதிப்​பெண் சான்​றிதழை​யும் மேற்​கண்ட தளத்​திலேயே பதி​விறக்​கம் செய்​துக் கொள்​ளலாம். இதில் ஏதேனும் சிரமங்​கள் இருப்​பின் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூல​மாக அல்​லது csirnet@nta.ac.in எனும் மின்​னஞ்​சல் முகவரி வாயி​லாக தொடர்​புக் கொண்டு உரிய விளக்​கம் பெறலாம்.

இதுகுறித்த கூடு​தல் விவரங்​களை /nta.ac.in/ என்ற வலைத்​தளத்​தில் அறிய​லாம் என்​று, என்​டிஏ வெளி​யிட்​ட செய்​திக்​ குறிப்பில்​ தெரிவிக்​கப்பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி