தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2026

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

 

தமிழ்நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தில் 2026 ஆண்​டுக்​கான (ஜனவரி-டிசம்​பர்) மாணவர் சேர்க்கை தொடங்​கியது.

தமிழ்நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகம் தொலை​தூரக் கல்வி திட்​டத்​தில் தமிழ், ஆங்​கிலம், வரலாறு, மேலாண்​மை, வர்த்​தகம், சமூக​வியல், சமூகப் ​பணி, பொருளா​தா​ரம், பொது நிர்​வாகம் உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் 11 இளங்​கலை படிப்​பு​களை​யும் 11 முதுகலை படிப்​பு​களை​யும் வழங்கி வரு​கிறது.

இவை தவிர, பல்​வேறு பாடங்​களில் 11 டிப்​ளமா படிப்​பு​கள், 12 சான்​றிதழ் படிப்​பு​கள் உள்​ளிட்​ட​வை​யும் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்நிலை​யில், 2026 ஆண்​டுக்​கான (ஜனவரி-டிசம்​பர்) மாணவர் சேர்க்கை நேற்று தொடங்​கப்​பட்​டது. இச்​சேர்க்​கையை பல்​கலைக்​கழக பதி​வாளர் கு.இ​ரா.செந்​தில்​கு​மார் தொடங்​கி ​வைத்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் மாணவர் சேர்க்கை பிரிவு இயக்​குநர் ஆர்​.ஆறு​முகம், மாணவர் உதவி மற்​றும் சேவைப் பிரிவு இயக்​குநர் த.ர​வி​மாணிக்​கம், பாடநூல் தயாரிப்பு மற்​றும் விநி​யோகப் பிரிவு இயக்​குநர் பா.​பாண்​டிய​ வடிவு ஆகியோர் பங்​கேற்​றனர்.

வெவ்​வேறு பாடப் பிரிவு​கள், அவற்​றுக்​கான அடிப்​படைக் கல்​வித் தகு​தி​கள், மாணவர் சேர்க்கை விதி​முறை​கள் உள்​ளிட்ட அனைத்து விவரங்​களை​யும் பல்​கலைக்​கழகத்​தின் இணை​யதளத்​தில் (www.tnou.ac.in) தெரிந்​துக் ​கொள்​ளலாம் என பதி​வாளர் செந்​தில்​ கு​மார் தெரி​வித்​துள்​ளார்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி