ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பணிகளுக்காக குடிமைப் பணி (சிவில் சர்வீஸ்) தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான இத்தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்துகிறது.
அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 23 விதமான பதவிகளில் மொத்தம் 933 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இத்தேர்வு எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 21 முதல்32 வரை. ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதியுடைய பட்டதாரிகள் https://upsconline.nic.in என்ற இணையதளம் மூலமாக பிப்.24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி