பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான (ஜேஆர்எஃப்) மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஜூன், டிசம்பர் என ஆண்டுக்கு 2 முறை கணினி வழியில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான 2-ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு கடந்த டிச.31 முதல் ஜன.7-ம் தேதி வரை பாடவாரியாக நடத்தப்பட்டது. மொத்தம் 9.94 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்த நிலையில், 7.36 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவு களை ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற தளத்தில் அறியலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி