திருக்குறள்
Affection lives where kindness stays.
கனிவு இருக்கும் இடத்தில் பாசம் வாழ்கிறது.
இரண்டொழுக்க பண்புகள் :
1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.
2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.
பொன்மொழி :
கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கி விடும் - முகம்மது நபி
பொது அறிவு :
01.சீனப் பெருஞ்சுவரை முதன்முதலில் இணைத்து கட்ட உத்தரவிட்டவர் யார்?
சின் வம்சத்தின் முதல் பேரரசர் சின் சி ஹுவாங் - Qin Shi Huang
02.தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைச் சமவெளி எப்பெயரால் குறிப்பிடப்படுகிறது?
சோழமண்டலக் கடற்கரை
Coromandel Coast
English words :
concordance -to collect all the words used in a book or a writer's work into a book or list in alphabetical order, with information about where the words can be found and in which sentences:
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
500 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிமங்களில் உள்ள கலவை பூமியின் கார்பன் சுழற்சி குறித்த புதிய பார்வையை வழங்குகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பு மரபணுக்களை முடக்க, புதிய CRISPR கருவி பாக்டீரியாக்கள் முழுவதும் பரவுகிறது.
பிப்ரவரி 11
நீதிக்கதை
தங்கமா? வெள்ளியா?
ஒரு நாட்டில் பொருளாதார நிபுணர் ஒருவர் இருந்தார். அந்த நாட்டு மன்னர் எந்த ஒரு முக்கியமான காரியத்தை செய்வதாக இருந்தாலும், அந்த நிபுணரை அழைத்து ஆலோசனைக் கேட்ட பிறகே செய்வார். அவரின் புகழ் மற்ற நாடுகளுக்கும் பரவியது.
ஒரு நாள் பொருளாதார நிபுணரை, அவர் வசிக்கும் ஊரின் தலைவர் அழைத்து, நீ நாட்டுக்கே பொருளாதார விஷயங்களில் ஆலோசனை வழங்குகிறாய். ஆனால் உன் மகனை கவனிக்காமல் விட்டுவிட்டாயே. அவனுக்கு உலோகத்தில் அதிக விலை மதிப்பானது தங்கமா? அல்லது வெள்ளியா என்று கூட தெரியவில்லையே. நாட்டு விஷயங்களை கவனித்தது போதும், வீட்டையும் கொஞ்சம் கவனி என்று கூறினார்.
வீட்டிற்கு வந்த நிபுணர், தனது மகனை அழைத்து, மகனே.. உலோகத்தில் விலை மதிப்பானது தங்கமா? வெள்ளியா? என்று கேட்டார். அதற்கு அந்த மகன் தங்கம் என்று பதிலளித்தான். உடனே, தந்தை பிறகு ஏன் இந்த ஊர் பெரியவர்கள் உன்னைப் பற்றி என்னிடம் புகார் கூறினார்கள். உன்னை நான் சரியாக வளர்க்கவில்லை என்றும், தங்கத்திற்கும், வெள்ளிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கூட அவன் அறிந்திருக்கவில்லை என்று என்னிடம் சொன்னார்கள் என்று சந்தேகத்துடன் கேட்டார்.
அதற்கு அந்த மகன், தந்தையே, தினமும் நான் பள்ளிக்குச் செல்லும் போது, உங்களிடம் என்னைப் பற்றி சொல்லிய பெரியவர்கள், என்னை அழைத்து ஒரு கையில் வெள்ளி நாணயங்களையும், ஒரு கையில் தங்க நாணயத்தையும் வைத்துக் கொண்டு, இதில் எது பெரியதோ அதை நீ எடுத்துக் கொள் என்று கூறுவார்கள்.
நான் உடனே வெள்ளி நாணயங்களை எடுத்துக் கொள்வேன். அவர்கள் கலகலவென்று சிரிப்பார்கள். நான் வெள்ளி நாணயத்தை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று விடுவேன் என்றான். இதைக் கேட்டு அதிர்ந்த நிபுணர், வெள்ளியை விட தங்கம்தான் விலை உயர்ந்தது என்று உனக்குத் தெரிந்திருந்தும் ஏன் வெள்ளியை எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டார்.
அதற்கு அந்த மகன், தந்தையை தனது அறைக்கு அழைத்துச் சென்று, ஒரு பெட்டியைத் திறந்து காண்பித்தான். அந்த பெட்டி நிறைய வெள்ளி நாணயங்கள் இருந்தன. அப்போது மகன் சொன்னான், தந்தையே, ஒவ்வொரு முறையும் அவர்கள் என்னிடம் தங்க, வெள்ளி நாணயங்களை காண்பிக்கும் போதும் நான் வெள்ளி நாணயங்களையே எடுத்துக் கொள்வேன். அதனால்தான் என்னிடம் இவ்வளவு வெள்ளி நாணயங்கள் இருக்கின்றன. நான் எப்போது தங்க நாணயத்தை தேர்வு செய்கிறேனோ அன்றுடன் இந்த ஆட்டம் நின்று போகும். அவர்களை ஆட்டத்தில் வெற்றி பெற விட்டு விட்டு, நான் நிஜத்தில் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். இந்த பதிலைக் கேட்டதும் ஆனந்தம் அடைந்தார் தந்தை.
நீதி :
புத்திசாலிகளுக்கு என்றுமே வெற்றிதான்.
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி