தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கணிதப் பாடத்துக்கான தேர்வு நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் கணிதத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் கூறும்போது, “கணிதப் பாடத்துக்கான வினாத்தாளில் பெரும்பாலும் எளிதான வினாக்களே இடம் பெற்றிருந்தன.
எனினும், ஒரு மதிப்பெண் பகுதியில் 2 கேள்விகளும், இரு மதிப்பெண் பகுதியில் கட்டாய வினாவும் கடினமாக இருந்தன. அதேபோல், 5 மதிப்பெண் பகுதியில் பெரிதும் எதிர்பார்த்த தேற்றம் இடம்பெறாதது ஏமாற்றம் அளித்தது. இதனால் சென்டம் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது” என்றனர்.
பத்தம் வகுப்பு அறிவியல் பாடத்தேர்வு மார்ச் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்தமாக ஏப்.6-ம் தேதியுடன் தேர்வு முடிவடைய உள்ளது. தேர்வு முடிவுகள் மே 20-ல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி