அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2026

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

 

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தற்போது கற்றல், கற்பித்தல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்படபல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன.

2024-ம் ஆண்டுமுதல் அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக முன்கூட்டியே மாணவர் சேர்க்கை மார்ச் மாதமே தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி வரும் கல்வியாண்டுக்கான (2026-27) மாணவர் சேர்க்கையும் நேற்றுமுதல் தொடங்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்து,புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கான நலத்திட்டப் பொருட்களை வழங்கினார்.

இதுதவிர அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்கவும், நடப்பாண்டில் 5 லட்சம் பேரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி