பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஸ்கிரைப் நியமன விதிமுறைகளில் தேர்வுத் துறை சில திருத்தங்களை செய்துள்ளது. சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை இந்த பணிக்கு நியமிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் க.சசிகலா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புக்கான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வர்களின் முகப்புத் தாள்கள் முதன்மை விடைத்தாள்களுடன் தைக்கப்பட்டுள்ளதை தேர்வுக்கு முன்னரே உறுதி செய்ய வேண்டும்.
இதுதவிர, சொல்வதை எழுதுபவர் (ஸ்கிரைப்) நியமனங்களில் தேர்வு நடைபெறும் பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது. அதேபோல, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் அறை கண்காணிப்பு பணியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு வழங்கப்படும் கோடிடப்படாத கூடுதல் விடைத்தாள்களை போதுமான அளவு பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி