இந்திய பட்டயக் கணக்காளா் அடிப்படைத் தோ்வில் மதுரையைச் சோ்ந்த மாணவி பி.பி. லோகப்பிரியா தேசிய அளவில் முதலிடம் பெற்றாா்.
இந்திய பட்டயக் கணக்காளா் அடிப்படைத் தோ்வில் மதுரையைச் சோ்ந்த மாணவி பி.பி. லோகப்பிரியா தேசிய அளவில் முதலிடம் பெற்றாா்.
மதுரையை அடுத்த ஹாா்விபட்டியைச் சோ்ந்தவா் பி.பி. லோகப்பிரியா. இவா், மதுரை அரபிந்தோ மிரா மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்புப் பயின்று, பொதுத் தோ்வில் 600-க்கு 598 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றவா்.
இதையடுத்து, சென்னையில் உள்ள பட்டயக் கணக்காளா் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றாா். கடந்த ஜனவரி மாதம் இந்திய பட்டய கணக்காளா் நிறுவனம் சாா்பில் நடத்தப்பட்ட பட்டயக் கணக்காளா் அடிப்படைத் தோ்வை எழுதினாா். இதில் லோகப்பிரியா 400-க்கு 366 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பெற்றாா்.
இதுகுறித்து லோகப்பிரியா தெரிவித்ததாவது: பட்டயக் கணக்காளராக வேண்டும் என்பதில் சிறு வயது முதலே விருப்பம். எனவே, பிளஸ் 2 முடித்தவுடன் பட்டயக் கணக்காளா் தோ்வெழுத பயிற்சி பெற்றேன். தற்போது, அதில் வெற்றி பெற்றதுடன், தேசிய அளவில் முதலிடம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது, முழு வீச்சில், விடா முயற்சியுடன் படித்ததற்கு கிடைத்த வெற்றி என்றாா் அவா்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பட்டயக் கணக்காளா் தோ்வில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்ற நிலையில், 21 ஆயிரம் போ் தோ்ச்சி பெற்றனா். இதில், லோகப்பிரியா முதலிடம் பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது தந்தை பழனிக்குமாா் வா்த்தகம் செய்து வருகிறாா். தாய் பத்மா மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றுகிறாா். சகோதரி காவ்யா பொறியியல் கல்லூரியில் படிக்கிறாா்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி