கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பு தொடங்க அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2026

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பு தொடங்க அனுமதி

 

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்​து​வ​மனை​யில், எம்.ஏ. கிளினிக்​கல் சைக்​காலஜி என்ற புதிய படிப்பை வரும் கல்வி ஆண்​டில் தொடங்க, தமிழக அரசு அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இது தொடர்​பாக, சுகா​தா​ரத்​துறை செயலர் பி.செந்​தில்​கு​மார் வெளி​யிட்​டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் எம்.ஃபில். கிளினிக்​கல் சைக்​காலஜி என்ற படிப்பு நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்த படிப்​புக்கு பதிலாக எம்.ஏ. கிளினிக்​கல் சைக்​காலஜி என்ற பெயரில் புதிய படிப்பை வழங்​கு​மாறு இந்​திய மறு​வாழ்​வுக் கவுன்​சில், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்​து​வ​மனையை அறி​வுறுத்​தி​யது.

ஆண்டுக்கு 18 மாணவர்கள்

அதன் பேரில், வரும் கல்வி ஆண்டு (2026-2027) எம்.ஏ. கிளினிக்​கல் சைக்​காலஜி படிப்பை தொடங்​கும் வகை​யில், மருத்​துவ கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் மூல​மாக, கீழ்ப்பாக்கம் மனநல மருத்​து​வ​மனை இயக்​குநரின் கருத்​துரு அரசுக்கு வரப்​பெற்​றது.

அக்​கருத்​துருவை ஏற்று கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் 2026-27-ம் கல்வி ஆண்​டில் எம்.ஏ. கினிக்​கல் சைக்​காலஜி படிப்பை தொடங்​க​வும், ஆண்​டு​தோறும் 18 மாணவர்​களை சேர்த்​துக் கொள்​ள​வும் அனு​மதி அளித்து அரசு ஆணை​யிடு​கிறது.

இப்​பு​திய படிப்​புக்கு இந்​திய மறு​வாழ்​வுக் கவுன்​சில் மற்​றும் தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​துவ பல்​கலைக் கழகத்​திடம் உரிய அனு​மதி பெறப்பட வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி