பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு எளிது: ‘சென்டம்’ அதிகரிக்க வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2026

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு எளிது: ‘சென்டம்’ அதிகரிக்க வாய்ப்பு

பத்​தாம் வகுப்பு அறி​வியல் தேர்வு எளி​தாக இருந்​த​தால், முழு மதிப்​பெண் பெறும் மாணவர்​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என்று ஆசிரியர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இதில், அறி​வியல் பாடத் தேர்வு நேற்று நடை​பெற்​றது. மாநிலம் முழு​வதும் 4,219 மையங்​களில் சுமார் 8.80 லட்​சம் மாணவர்​கள் எழு​தினர். தேர்வு எளி​தாக இருந்​த​தால் மாணவர்​கள் மகிழ்ச்சி அடைந்​தனர்.

இதுகுறித்து அறி​வியல் பாட ஆசிரியர்​கள் கூறும்​போது, “அறி​வியல் தேர்​வில் அனைத்​துப் பிரிவு வினாக்​களும் மிக எளி​தாக இருந்​தன. சராசரி​யாக படிக்​கும் மாணவர்​கள்​கூட 70 சதவீத மதிப்​பெண்​களைப் பெற​முடி​யும். இந்த ஆண்டு அறி​வியல் பாடத்​தில் முழு மதிப்​பெண் பெறும் மாணவர்​களின் எண்​ணிக்கை கணிச​மாக அதி​கரிக்​கும்” என்​றனர்.

சமூக அறி​வியல் பாடத் தேர்வு ஏப்​.2-ம் தேதி நடை​பெற உள்​ளது. ஒட்​டுமொத்​த​மாக, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்​.6-ம் தேதி​யுடன் முடிவடைகிறது. தேர்வு முடிவு​கள் மே 20-ம் தேதி வெளி​யிடப்பட உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி