பள்ளி முழு ஆண்டுத் தேர்வுகள் இன்றுடன் (ஏப்.16) நிறைவு பெறுவதை அடுத்து, மாணவர்களுக்கான கோடை விடுமுறை நாளை (ஏப்.17) முதல் தொடங்குகிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளதால், வழக்கத்தைவிட முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதன்படி 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வந்த முழு ஆண்டுத் தேர்வுகள் இன்றுடன் (ஏப்ரல் 16) நிறைவுபெறுகின்றன. நிறைவு நாளில் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு: தொடர்ந்து இவர்களுக்கான கோடை விடுமுறை நாளை (ஏப்ரல் 17) முதல் தொடங்குகிறது. எனினும், ஆசிரியர்கள் பள்ளி இறுதி வேலைநாளான ஏப்ரல் 25-ம் தேதி வரை பணிக்கு வந்து விடைத்தாள் மதிப்பீடு மற்றும் மாணவர் சேர்க்கை போன்ற நிர்வாகப் பணிகளை கவனிக்க வேண்டும். கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி