JEE பிரதான தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்: மே 2 வரை அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2026

JEE பிரதான தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்: மே 2 வரை அவகாசம்

 

மே 17-ம் தேதி நடை​பெறும் ஜேஇஇ பிர​தானத் தேர்​வுக்​கான வி்ண்​ணப்ப பதிவு இன்று தொடங்​கு​கிறது. முதன்​மைத் தேர்​வில் வெற்றி பெற்ற மாணவர்​கள் மே 2-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்​கலாம்.

நாடு முழு​வதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்​திய உயர்​கல்வி நிறு​வனங்​களில் இளநிலைப் படிப்​பு​களில் சேர, ஒருங்​கிணைந்த நுழைவுத் தேர்​வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்​டும். இது முதன்​மைத் தேர்​வு, பிர​தானத் தேர்வு என 2 கட்​ட​மாக நடத்​தப்​படு​கிறது. 2026-ம் ஆண்​டுக்​கான முதன்​மைத் தேர்வு ஜனவரி, ஏப்​ரல் மாதங்​களில் நடத்தி முடிக்​கப்​பட்​டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்​களுக்​கான பிர​தானத் தேர்வு மே 17-ம் தேதி நடத்​தப்பட உள்​ளது.

இதற்​கான இணை​யதள விண்​ணப்ப பதிவு இன்று (ஏப்​.23) தொடங்​கு​கிறது. தகு​தி​யான மாணவர்​கள் https://jeeadv.ac.in இணை​யதளம் வாயி​லாக மே 2-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். இந்த ஆண்​டில் இத்​தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்​துகிறது. காலை, மதி​யம் என 2 தாள்​களாக தேர்வு நடை​பெறும்.

இதில் தேர்ச்சி பெறு​பவர்​களுக்கு நாடு முழு​வதும் உள்ள 23 ஐஐடிக்​களில் சேர்க்கை இடங்​கள் கலந்​தாய்வு மூலம் ஒதுக்​கப்​படும். இதுபற்​றிய கூடு​தல் விவரங்​களை மேற்​கண்ட தளத்​தில் அறிந்து கொள்​ளலாம் என்று துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி