தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகத்திற்கும் அதன் தலைவர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இளைஞர்கள், பெண்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் ஆதரவை பெற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய் அவர்கள், நல்லாட்சி புரிய வேண்டுமென வாழ்த்துகிறோம்.
தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பி இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு வழி வகுக்க வேண்டும். அதுபோல் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
அனைத்து தரப்பு பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்து கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்வதை வழக்கப்படுத்திக் கொண்டு தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

சங்கத்து காரணங்களே திரு விஜய் அவர்களிடம் பெட்டி வாங்கி முடியாது வீரனாக கூவ வேண்டாம்
ReplyDelete