முதல்வர் ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ் பாபு!! யார் இந்த வி.எஸ் பாபு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2026

முதல்வர் ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ் பாபு!! யார் இந்த வி.எஸ் பாபு?

யானையின் காதில் புகுந்த எறும்பு!

முதல்வர் ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ் பாபு!! யார் இந்த வி.எஸ் பாபு?

~~~~~~

ஒரு காலத்தில் வட சென்னை திமுகவில் அசுர சக்தியாக இருந்தவர் தான் இந்த வி.எஸ்.பாபு. வடசென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்த இவர், 2006 சட்டப்பேரவை தேர்தலில் புரசைவாக்கத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். 


2011 ல் புரசைவாக்கம் தொகுதி நீக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உதயமானது. 2011 ல் ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்டதால் அப்போது வி.எஸ்.பாபுவுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருப்பினும் கொளத்தூரில் ஸ்டாலினின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார் பாபு. 


அந்த சமயத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பி.கே.சேகர்பாபு, புதிய வரவாக திமுகவுக்கு வந்தார். அவருக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததால் 2011 தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலினை எதிர்த்துக் கொண்டு திமுகவிலிருந்து விலகிய வி.எஸ்.பாபு, அதிமுகவில் இணைந்தார்.


ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவிலும் அவருக்கான முக்கியத்துவம் குறைந்து போனது. இந்த நிலையில், 2017 ல் நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக களப்பணி செய்ததாகக் கூறி, 2018 ல் வி.எஸ்.பாபு உள்ளிட்ட 168 பேர் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.


அதன் பிறகு அமைதிகாத்த பாபு, இபிஎஸ் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதும் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஆனாலும், அதிமுகவிலும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. 


அதனால், அதிருப்தியில் இருந்து வந்த வி.எஸ்.பாபு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். தற்போது வி.எஸ். பாபு 82,997 வாக்குகள் பெற்று, முதல்வர் ஸ்டாலினை வீழ்த்தியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி