அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வந்தவர்கள், தங்களை பணி வரன்முறை செய்து, உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையடுத்து ஆயிரத்து 146 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக சிறப்புத் தேர்வு நடத்தி, உதவி பேராசிரியர்களாக நியமிப்பது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு, ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்த தமிழக அரசு, அதற்கு முன்பாக 3 ஆண்டுகளாக காலியாக இருந்த 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கும் சேர்த்து தேர்வு நடத்த புதிதாக அரசாணை வெளியிட்டது.
இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், 2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி தங்களை பணிவரன்முறை செய்யக்கோரியும் கவுரவ விரிவுரையாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, கடந்த 2022-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்வது தொடர்பான 2020 அரசாணைப்படி தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும் என கடந்த 2024 ஏப்ரலில் உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி