அரசுப் பள்ளிகளில் ஆசிரியர கள் பதவி உயர்வுக்கு 'டெட்' தேர்ச்சி கட்டாயம் என்று பள்ளிக் கல்வித் துறை செயலர் சந்திர மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக் கான பணி நியமன விதிமுறைகள் தொடர்பான 7 அரசாணை களை கடந்த ஜூன் 3-ம் தேதி யிட்ட தமிழக அரசிதழில் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அதில், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனம், பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர் வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என்பது நேரடியாக குறிப் பிடப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர்.
இந்நிலையில், டெட் தேர்ச்சி தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் ப.சந்திரமோகன்
நேற்று தெரிவித்துள்ளதாவது:
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணி விதிகள் தொடர்பாக அரசிதழில் அறிவிக் கைகள் வெளியிடப்பட்டன. அதில் ஒரு சில அறிவிக்கைகள், ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி அவசியமா, இல்லையா என்ற குழப்பத்தை ஆசிரியர்களிடம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
டெட் தேர்ச்சி தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகல் இன்னும் கிடைக்கப் பெறாத நிலையில், ஆசிரியர் பணி நியமன விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அஞ்சுமன் இஷாத் இ தாலீம் அறக்கட்டளை - மகாராஷ்டிர அரசு இடையிலான வழக்கில், கடந்த மே 29-ம் தேதி உச்ச நீதி மன்றம் வழங்கிய மறு ஆய்வு தீர்ப்பின்படி, டெட் தேர்ச்சி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என்பது தெளிவாக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி