திருக்குறள்
A hungry man is an angry man
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1) ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஆக்கமுடன் செய்வேன் .
2) முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்வேன்.
பொன்மொழி :
கல்வியே மனிதனின் மிகப் பெரிய செல்வம். - காமராஜர்
Thought for the Day :
Education is the most powerful weapon which you can use to change the world - Nelson Mandela.
பொது அறிவு :
1. ஒட்டகசிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் இருக்கும்?
ஏழு.
2. முன்னோக்கி மட்டுமே நடக்கக் கூடிய விலங்கு எது?
கங்காரு.
English words :
Conceal – Hide, மறை.
Diminish – Reduce, குறை.
புவியியலும் சுற்றுசூழலும் :
அண்டார்டிகா – உலகின் மிகவும் குளிரான கண்டம்; நிரந்தர குடியிருப்புகள் இல்லை.
NMMS :
SAT - Social Science
இஇவற்றில் எது முதன்மைச் சான்று அல்ல???
(1) பொறிப்புகள்
(2) நினைவுச் சின்னங்கள்
(3) நாணயங்கள்
(4) இலக்கியங்கள்
விடை: (4) இலக்கியங்கள்
ஜூன் 29
2007 – ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஐபோனை (iPhone) வெளியிட்டது. ஐபோன் ஸ்மார்ட்போன் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியதுடன், ஒரு காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தை உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகவும் மாற்றியது.
நீதிக்கதை
"அரண்மனையின் காணாமல் போன கிரீடம்"
ஒரு பெரிய நாட்டை நீதிமான் அரசர் ஒருவர் ஆட்சி செய்து வந்தார். அவரது அரண்மனையில் அனைவரும் நேர்மையாக வாழ வேண்டும் என்பது முக்கியமான விதியாக இருந்தது.
ஒருநாள், இளவரசரின் வெள்ளி கிரீடம் காணாமல் போனது. அரண்மனைமுழுவதும் தேடியும் கிடைக்கவில்லை . அரசர் யாரையும் உடனே குற்றம்சாட்டவில்லை .
சிறிது நேரத்தில், புதிய வேலைக்காரச் சிறுவன் ஒருவன் நடுங்கியபடி அரசரிடம் வந்து, "அரசே , அந்த கிரீடம் மிகவும் அழகாக இருந்ததால் சிறிது நே ரம் அணிந்து பார்க்க வேண்டும் என்று எடுத்தேன். பிறகு பயந்து மறைத்துவைத்துவிட்டே ன்.
என்னை மன்னித்துவிடுங்கள்," என்றான்.
அரசர் கோபப்படாமல், "தவறை ஒப்புக்க கொண்டது நல்லது. ஆனால் பிறருடைய பொருளை அனுமதி இல்லாமல் எடுப்பதே திருட்டு. அது நம்பிக்கை யை உடைத்துவிடும். இனி இப்படிச் செய்யாதே ," என்று அறிவுரை கூறினார்.
சிறுவன் தனது தவறை உணர்ந்து, இனி வாழ்நாள் முழுவதும் நேர்மையாக இருப்பதாக உறுதியளித்தான்.
நீதி: பிறருடைய பொருளை அனுமதி இல்லாமல் எடுப்பது தவறு. நேர்மையே மனிதனின் மிகப் பெரிய செல்வம்.
இன்றைய செய்திகள்


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி